Saturday, August 21, 2021

இஸ்லாத்தின் வெற்றியா தோல்வியா

சிரியா, லெபனான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் பெரும் அளவில் இஸ்லாம் மதத்தை சார்ந்தோர்.

இந்த நாடுகளில் மட்டும் ஏன் போர்கள் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது? என்பது ஒரு வினாவை முன் வைக்கின்றன., 

இந்த நாடுகளில் இருந்து வரும் மக்கள் அகதி முகாம்களில், அண்டை நாடுகளில் உள்ள நிலையில், அங்கு ஆட்சியில் அமர இருப்போர் யாருக்காக இந்த போரை நடத்துகின்றனர்? 

போர் முடிந்து விட்டால் சொந்த தேசம் நோக்கி செல்வீர்களா என்ற வினாவிற்கு,. "இல்லை ", என்று கூறும் நிலையில் யாருக்காக , எதற்காக சண்டை நடக்கின்றது?


சொந்த மண்ணை விட்டு, 
அந்நிய நாட்டை நோக்கும்,
அவலம் செய்தோம்.

அவர்களை காக்கும், 
கைகளை தடுத்தோம்,
வேலியில் இடும்,
நிலைதனை தந்தோம்.

தன் குருதி வேண்டா 
நிலம் தேட செய்தோம்,
சொந்த மக்களை காக்காது,
யாரை காக்க ? 

உன்னத இஸ்லாம் , 
உடைந்து போனதோ?,
உடைக்க பட்டதோ?,

மாற்றம் ஏற்கா "சமயம்"
மண்ணில் நிலைக்க,
மைந்தர்கள் குருதி வேண்டியதோ?,

இஸ்லாத்தின் பெயரால், 
இத்தனை தொழுகையும் ,
இத்தனை நோன்பும் ,
கொண்டோரே , 

கொன்று , எழுவதும்? ,
புதைத்து , எழுப்புவதும்?,
கண்ணிரில் குருதி கறை தொலைப்பதும்,

இஸ்லாத்தின் வெற்றியா? தோல்வியா?



என்றும் என்றென்றும்
அன்புடன்

விவசாயி









No comments:

Post a Comment