Friday, August 23, 2013

செஞ்சி - "திருநாதன் குன்று"

"திருநாதன் குன்று" செஞ்சியில் இருந்து சுமார் 1.5 கி.மி. தொலைவில் உள்ள மலை, இங்கு இருக்கும் ஒரு பெரிய பாறையில் 24 சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் அமைந்துள்ளது, சமணம் தழைத்தோங்கிய தமிழகத்தில் 24 தீர்த்தங்கரர்களையும் ஒரே இடத்தில் இங்கு மட்டுமே காண முடியும்

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில், "சந்திரநந்தி" என்ற சமண துறவி 57 நாட்கள் கடவுளுக்கு உண்ணா நோன்பு இருந்து இந்த இடத்தில் தான் உயிரை விட்டுள்ளார். "இளையபட்டாரா" என்ற இன்னொரு சமண துறவி 30 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிரை விட்டுள்ளார்.இங்கு சமணர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது
 நன்றி : சசிதரன்
 
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் சிறப்பு அம்சங்கள்

பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !

கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. !!

கும்பகோணம் சுற்றுப்புற கோவில்கள்

 கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற கோவில்கள் பற்றிய தகவல்களை கீழ்காணும் நிலை தொடர்பால் காணலாம்.

http://shanthiraju.wordpress.com/around-kumbakonam-1/

http://shanthiraju.wordpress.com/around-kumbakonam-2/

சுந்தரேஸ்வரர் கோவில் ,கருப்பூர் -கும்பகோணம்

சுந்தரேஸ்வரர் கோவில் ,கருப்பூர் -கும்பகோணம்

இறைவனுக்கு அபிஷேகமாகும் நீரை கோமுகியிலிருந்து தன் தலையில் ஒரு பாத்திரத்தில் பிடிக்கும் பூத கணம் பின் அதன் குதத்தின் வழியே ஒரு பெண்ணுருவின் தலையினுள் சென்று வயிற்றின் துளை வழியே வெளியேறும் வகையில் வடிவமைக்கபட்டிருக்கிறது .

சிந்திக்கவே திணறவைக்கும் ஒரு யோசனை மிகுந்த வடிவமைப்பை கலை வடிவமாக்கி காட்சி படுத்தியிருக்கிறார்கள் . காண்பதற்கு கூட நேரமின்றி விரையும் நவீன உலகில் அதிசயங்கள் கூட ஆச்சர்யபடுத்துவதில்லை . .

நன்றி : தமிழ் கோவில்கள் Tuesday, August 20, 2013

"கொங்கு நாட்டு சிற்ப ஸ்தலம்" - திருப்பூர்

"கொங்கு நாட்டு சிற்ப ஸ்தலம்"

சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை அர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது.

திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில், பாண்டிய மன்னர்களாலும் சோழர்களாலும் கட்டப்பட்டுள்ள இந்த "சுக்ரீஸ்வரர் கோயில்" குறித்த வரலாறும் விவரமும் இது வரை மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை. கி.பி.12 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. தற்போது மத்திய தொல்லியல் துறையால் "பாதுகாகப்பட்ட சின்னமாக" அறிவிக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்.

1) அம்மனுக்கென தனி கோயிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது.

2) அம்மனுக்கென தனி கோயில்,கோயிலின் வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

3)கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4)ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில்.

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.

6) கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.
நன்றி : சசிதரன்Thursday, August 8, 2013

பனை மலை கோயிலுக்கும் செல்லலாம்...

செஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் உள்ளது "பனைமலை". வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே, "வாங்க, வாங்க, இங்கே தான் இருக்கேன் " என்று சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலேயே கம்பீரமாக மலையின் மீது இருந்த இந்த 1300 வருட பொக்கிஷம் எங்களை வரவேற்பதை போன்றிருந்தது. செங்குத்தான மலை, மலை ஏறுவதற்கு பாறைகளையே படிகளாக செதுக்கி இருகிறார்கள். மேலே சென்றதும் அவர் சொன்னது போல், இந்த இடம் ஒரு சொர்க்கம் தான், மலை மீது நின்று பார்த்தால், கோயிலின் முன் புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருத நிலம், அதற்கு நடுவே சாலை, பின்புறம் மலைகள், நடுவிலே ஏரி, ஆனால் தவறான காலத்தில் வந்து விட்டோம், அறுவடை முடிந்த வேலை, மழை இல்லாமல் வறண்ட ஏரி, சுட்டெரிக்கும் சூரியன், இந்த இடத்திற்கு செல்ல சரியான காலம், நவம்பர், டிசம்பர்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவரும், மாமல்லபுரம் சிற்பங்களை கொடுத்தவருமான "ராஜசிம்ம பல்லவனால்" கட்டப்பட்டது இந்த கோயில், கைலாசநாதர் கோயிலை போலவே எல்லா இடங்களிலும் ஓவியங்களை தீட்டி இருக்கிறார்கள், அதற்கான சுவடுகள் ஆங்காங்கே தெரிகிறது, ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு ஓவியம் இன்றும் உயிரோடு உள்ளது. காண கண்கோடி வேண்டும், என்ன வளைவு, என்ன நெளிவு, என்ன நிறங்கள்!! ஆஹா பார்க்கும் போது மனிதர்கள் அப்போது எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருகிறார்கள் என்பதை காட்டுகிறது.

கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன சன்னதியில் ஒரு சுரங்கம் உள்ளது, உள்ளே சென்று பார்த்தேன் சுமார் ஆறடி உயரத்திற்கு கீழே இறங்கி உள்ளே செல்ல வேண்டும், சென்றதும் உள்ளே ஒரு சிறிய அறை, இருட்டாக இருந்தது, விஷ ஜந்துக்கள் இருந்தாலும் தெரியாது. வாயில் கைபேசியை கடித்துக்கொண்டு அதன் ஒளியால் மட்டுமே காண முடிந்தது.

அங்கிருந்து வெளியில் வந்து சுற்றி பார்க்கும்போதுதான் இன்னொன்றையும் பார்க்க நேர்ந்தது. அந்த கோவிலுக்கு நீர்வளம் சேர்க்க, அங்குள்ள பாறைகளை குடைந்து குளமாக மாற்றியிருக்கிறார்கள். குளம், ஓவியம், சிற்பம், கட்டிட அழகு, அலுக்காத இயற்கை வளம் போன்றவற்றை கண்டு, இறங்க மனமில்லாமல் மலையை விட்டு இறங்கினோம்.

அனைவரும் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்று பாருங்கள், உங்களுடைய பயணத்தை வெயில் முடிந்ததும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
https://www.facebook.com/media/set/?set=a.508117225918269.1073741827.100001599881709&type=1

Photo: இரு வாரங்களுக்கு முன்பு தேவனூரில் ஐம்பொன் சிலைகளை காணச் சென்ற போது, தேவனூர் கோயில் பணிகள் தொடங்க காரணமாக இருந்த, இயக்குனர் திரு.பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் என்னுடைய நண்பர் "திரு.தமிழ் செல்வனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
 உங்கள் மாவட்டத்தில் ராஜ ராஜன் கட்டிய கல்லூரி ஒன்று உள்ளது அதனுடன் சேர்த்து இன்னும்  சில புராதானமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை காண வேண்டும் உதவுவீர்களா? என்று கேட்டதும், துளியும் யோசிக்காமல் மனிதர் அடுத்த வாரம் வாருங்கள் அழைத்துச் செல்கிறேன் என்றார்  அப்போது அவர் " பனை மலை " கோயிலுக்கும் செல்லலாம் எனக்கு மிகவும் பிடித்த இடம் என்று கூறினார், ஏற்கனவே இந்த கோயிலின் சிறப்புகளை ஓரளவிற்கு இணையங்களில் படித்திருக்கிறேன், மேலும் இயக்குனர்கள் ரசிக்கும் இடம் என்றால் நிச்சயம் அழகானதாகவே இருக்கும் என்று புறப்பட்டோம் என்னுடன் நண்பர் ரமேஷும் உடன்வந்திருந்தார்.
 
செஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் உள்ளது "பனைமலை". வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே, "வாங்க, வாங்க, இங்கே தான் இருக்கேன் " என்று சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலேயே கம்பீரமாக மலையின் மீது இருந்த இந்த 1300 வருட பொக்கிஷம் எங்களை வரவேற்பதை போன்றிருந்தது. செங்குத்தான மலை, மலை ஏறுவதற்கு பாறைகளையே படிகளாக செதுக்கி இருகிறார்கள். மேலே சென்றதும் அவர் சொன்னது போல், இந்த இடம் ஒரு சொர்க்கம் தான், மலை மீது நின்று பார்த்தால், கோயிலின் முன் புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருத நிலம், அதற்கு நடுவே சாலை, பின்புறம் மலைகள், நடுவிலே ஏரி, ஆனால் தவறான காலத்தில் வந்து விட்டோம், அறுவடை முடிந்த வேலை, மழை இல்லாமல் வறண்ட ஏரி, சுட்டெரிக்கும் சூரியன், இந்த இடத்திற்கு செல்ல சரியான காலம், நவம்பர், டிசம்பர்.
 
காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவரும், மாமல்லபுரம் சிற்பங்களை கொடுத்தவருமான "ராஜசிம்ம பல்லவனால்" கட்டப்பட்டது இந்த கோயில், கைலாசநாதர் கோயிலை போலவே எல்லா இடங்களிலும் ஓவியங்களை தீட்டி இருக்கிறார்கள், அதற்கான சுவடுகள் ஆங்காங்கே தெரிகிறது, ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு ஓவியம் இன்றும் உயிரோடு உள்ளது. காண கண்கோடி வேண்டும், என்ன வளைவு, என்ன நெளிவு, என்ன நிறங்கள்!! ஆஹா பார்க்கும் போது மனிதர்கள் அப்போது எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருகிறார்கள் என்பதை காட்டுகிறது.
 
கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன சன்னதியில் ஒரு சுரங்கம் உள்ளது, உள்ளே சென்று பார்த்தேன் சுமார் ஆறடி உயரத்திற்கு கீழே இறங்கி உள்ளே செல்ல வேண்டும், சென்றதும் உள்ளே ஒரு சிறிய அறை, இருட்டாக இருந்தது, விஷ  ஜந்துக்கள் இருந்தாலும் தெரியாது. வாயில் கைபேசியை கடித்துக்கொண்டு அதன் ஒளியால் மட்டுமே காண முடிந்தது.

அங்கிருந்து வெளியில் வந்து சுற்றி பார்க்கும்போதுதான் இன்னொன்றையும் பார்க்க நேர்ந்தது. அந்த கோவிலுக்கு நீர்வளம் சேர்க்க, அங்குள்ள பாறைகளை குடைந்து குளமாக மாற்றியிருக்கிறார்கள். குளம், ஓவியம், சிற்பம், கட்டிட அழகு,  அலுக்காத இயற்கை வளம் போன்றவற்றை கண்டு, இறங்க மனமில்லாமல் மலையை விட்டு இறங்கினோம்.
 
அனைவரும் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்று பாருங்கள், உங்களுடைய பயணத்தை வெயில் முடிந்ததும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

https://www.facebook.com/media/set/?set=a.508117225918269.1073741827.100001599881709&type=1                                 
     
நன்றிகள்:- சசிதரன்

பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்...

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா? வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின் அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

தற்போது இந்த கோயிலை படத்தில் இருக்கும் இந்த பெரியவரும் அவரின் பேத்தியும் தான் பார்த்துக்கொள்கிறார்கள், இங்கு யாருமே வராததால் வெளியே இந்த கோயிலின் சிறப்பு குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. உலகில் பெரிய ஆட்கள் கூட யாரும் இதை சென்று பார்க்க வேண்டாம், உள்ளூரில் உள்ள நாமேனும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு அங்கு ஒரு விளக்கேற்றி வைத்து விட்டு வரலாமே!
 
நன்றிகள்:- சசிதரன்
 
நன்றிகள் : சசிதரன் :- உடையார் பயணம்.

உடையார் பயணம்.

திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் (வெள்ளை பிள்ளையார்) கோயிலில் க்ஷேத்ரபாலர் சன்னிதி ஒன்று "இருந்தது". இடிந்து வெறும் மண்மேடாக நெருஞ்சி முட்கள் சூழ கிடந்த இந்த இடத்தில் திரு. இரா.கலைக்கோவன், நளினி போன்ற கல்வெட்டு ஆய்வாளர்கள் அரும்பாடு பட்டு மிகுந்த சிரமத்துடன், இந்த சன்னதியில் இருந்த கல்வெட்டுகளை படி எடுத்தனர். இந்த க்ஷேத்ரபாலர் சன்னிதி, கோயில் வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் அப்போது தனிக்கோயிலாகவே விளங்கியுள்ளது. இக் கோயிலில் இருந்த கல்வெட்டுகளை கூறும் தகவலை ஆய்ந்தால் பிரமிப்பூட்டும் தகவல்கள் கிடைகின்றன, அதில் முக்கியமானது

"ராஜேந்திர சோழன் தனது தந்தையின் முதலாண்டு நினைவாக இந்த சன்னதியில் தான் எள் மலை புகுந்துள்ளார். அதாவது எள் கொண்டு நீத்தார் கடன் செய்ததைக் குறிப்பிடுகிறது.மேலும் ராஜேந்திர சோழனின் மனைவிகளில் ஒருவரான வானவன் மாதேவி இந்த கோயிலுக்கென ஒரு பொற்ப் பூவை அளித்துள்ளார்.அவரின் இன்னொரு மனைவியான கிழாநடிகள் பொன்னில் செய்த 25 நெருஞ்சிப் பூக்களை காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த கோயிலை கற்றளியாக எழுப்பிய ராஜ ராஜனின் மனைவியான உலகமாதேவியார் அறுபது பொற்பூக்களைப் காணிக்கையாக கொடுத்து தொழுதுள்ளார். உலகமாதேவியாரின் பணிமகள் வேளாண் இலங்கவிச்சாதிரி இரண்டு மஞ்சாடிக் பொன் அளித்துள்ளார்.

மேலும் முதலாம் ராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் உலகமாதேவியார் 144 கழஞ்சுப் பொன்னில் செய்யப்பட்ட 147 பொற்பூக்களைப் ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்!.அதே போல் நகை அன்பளிப்பாக ஷேத்திர பாலருக்கு தகட்டுத் திருமாலை, தகட்டுத் தோள்வளை, தகட்டுப் பாத சாயலம் ஆகியவற்றை போனால் சாற்றியுள்ளனர்.

தட்சிணாய சங்கராந்தி அன்று ராஜேந்திர சோழன் 46 கழஞ்சப் பொன்னால் செய்யப்பட்ட 1116 பொற்பூக்களால் ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்! ராஜேந்திர சோழரின் அன்னை திருபுவன மாதேவி 20 பொற்பூக்களைப் இட்டு வணங்கியுளார்.அதோடு பொன்னால் செய்யப்பட்ட உதரபந்தமும், தட்டும் வழங்கியுள்ளார். ராஜ ராஜ சோழன் இரண்டு சரணங்களை ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார். (தந்தையும், மகனும் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர்). இது அவர் இறப்பதற்கு முன் வழங்கப்பட்ட கொடை.

இது போக உலகமாதேவியார் ஷேத்திர பாலருக்கு வெள்ளி மானவட்டில் ஒன்றையும் அளித்துள்ளார்.அரசு அலுவலரான பெருந்தனத்துத் தந்தி வெள்ளியிலான பாத்திரம் ஒன்றும், வெண்கலத் தளிகைகள் இரண்டும், வெண்கலத்தாலான கவசமும், கரகமுடியும், இலைத் தட்டு ஒன்றும் வழங்கி வணங்கியுளார்.மற்றொரு பேரையன் என்ற அலுவலர் பொன் மோதிரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அரசர்கள்,அரசியர்,அலுவலர்கள் என அனைவரும் கொடுத்த கொடிகளை உரியவாறு பதிவு செய்ய இதற்கென ஆட்கள் நியமித்துள்ளார் உலகமாதேவியார். இந்த தகவல்கள் மூலம் இந்த ஷேத்திர பாலர் சோழ அரசர்களால் எவ்வளவு நேசித்து வணங்கபட்டுள்ளார் என்பதற்கு இந்த கல்வெட்டுகளே சான்று.

ஒரு காலத்தில் பொற்பூக்களால் சூழப்பட்ட ஷேத்திர பாலரின் சன்னதி தற்போது நெருஞ்சிப் பூக்களால் சூழப்பட்டு, கோயில் இடிந்து மண் மேடாக கிடந்ததை இப்போது தான் சீர் செய்துள்ளனர், இங்கிருந்து சில கற்களை வேறு கட்டுமானப் பணிகளுக்கு தூக்கிச் சென்று விட்டதால், தற்போது இந்த இடம் படத்தில் உள்ளதை போன்று தான் பரிதாபமாக காட்சியளிகின்றது. ஷேத்திர பாலராவது இருகிறாரன்னு கேக்கறீங்களா? அவர தூக்கி கொண்டு போய் தஞ்சாவூர் அருங்காட்சியத்துல காட்சிப் பொருளா வெச்சி ரொம்ப வருஷம் ஆகுது.

கல்வெட்டு தகவல்கள் : வரலாறு.காம்.

நன்றிகள் : சசிதரன் 