Tuesday, July 23, 2013

முடக்கற்றான் கொடி..!

முடக்கற்றான் கொடி..!

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான் ( Cardiospermum halicacabum ) 

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக:

முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.


பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு :

ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

Saturday, July 20, 2013

வானகம் - நிரந்தர வேளாண் பண்ணை இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

வானகம் - நிரந்தர வேளாண் பண்ணையில்
( சுவரில்லா கல்வி ) 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

நாள் : ஜுலை 30.7.13 செவ்வாய் காலை 9 மணி முதல் 1.8.13 வியாழன் மாலை 5 மணி வரை

இடம் : வானகம், கடவூர், சுருமான்பட்டி, கரூர் மாவட்டம்

முன்பதிவு செய்ய : 94880 55546, 94435 75431

பயிற்சி நன்கொடை : ரூ.1200/- மட்டும் . 
தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

முன்பதிவு & பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
( Vanagam IOB Account no )
G. Nammalvar A/C no :137101000011534
Bank Name : Indian Overseas Bank , Kadavoor
IFSC Code : IOBA0001371
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Contact : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311

பயிற்சியில் :

1. இயற்கை வேளாண்மையின் அவசியமும் , மரம் வளர்ப்பு பயிற்சியும்
2. நிரந்தர வேளாண்மையை எப்படி செலவில்லாமல் செய்வது பற்றியும்..
3. பஞ்சகாவியா, மீன்அமிலம், பூச்சுவிரட்டி தயாரிப்பு பற்றியும்,
4. மருந்தில்லா மருத்துவம் பற்றியும்,
5. சிறு தானியங்களின் அவசியம் பற்றியும்,
6. வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் பற்றியும்,
7. சுற்றுசுழல் பராமரிப்பும், அதன் தேவையும்,
8. சுய சார்பு வாழ்வியல் கல்வியும்,
9. தின்னைப் பேச்சு பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

இவை அனைத்தும் நேரடி களப் பயிற்சிகளே.. உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை ( உயிர் கருவை ) உயிர்பிக்க காத்துக் கொண்டிருக்கிறார் இயற்கை வாழ்வியல் நிபுணர் “ கோ. நம்மாழ்வார் “..

இன்னும் விதை தேவை, விதைகளை சேகரிப்போம். நேர்த்தியான விதையாய் மாறுவோம்.

வாழ்க இயற்கை! வாழ்க இயற்கை வேளாண்மை!!

சிவகாசியில் நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மை பயிற்சி முகாம்


சிவகாசியில் நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மையும் ( Permacultre ) &
இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி முகாம் ( வீட்டிலே சுகப் பிரசவம் உட்பட )
தின்னைப் பேச்சு :
--------------------
இரவு நேரங்கலில் நமது பாரம்பரிய தின்னைப் பேச்சும், சுற்றுப்புறசூழல் பற்றிய விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப் படும்.

இந்த சுயசார்பு பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய...


 பயிற்சி நாள் :
ஆகஸ்ட் 09-08-2013 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல்
11-08-2013 ஞாயிறு மாலை 5 மணி வரை

முன்பதிவு அவசியம் : 94435 75431 , 99947 56330.

 இடம் :
ஜேசுதாஸ் இயற்கை விவசாயப் பண்ணை,
நடுவப்பட்டி விளக்கு,
ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு,
சிவகாசி.
விருதுநகர் மாவட்டம்.

நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்

நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் 
(Vanagam Nammalvar Ecological Foundation ) 
Surumanpatti, Kadavur, 
Tharagampatti Via, Karur Dist, 
Tamil Nadu, India 
contact no: 9443575431, 9488055546

Friday, July 19, 2013

தண்ணீர் கலெக்டர்...

தண்ணீர் தண்ணீர் கலெக்டர் !!

---------------------------------------

மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமாயின், அது நீருக்காக வரும் போராயிருக்கும். அத்தகையதோர் போர், உலகம் ஒட்டுமொத்தமாய் அழிந்திட வித்திடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

இதை எண்ணத்தில் கருக்கொண்டு, உருக்கொணரும் ஓர் முயற்சியே இந்தியாவில் முதல்முறையாக சோதனை முயற்சியாய் மேற்கொள்ளப்பட்டிருப்பதாய் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சாதனை.

சிலர் சென்ற இடமெல்லாம் சிறக்கும். நெல்லையில் கலெக்டராக இருந்தபோதே, இவரது புரட்சித்திட்டங்கள் பல இனிக்கும். தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும், நெல்லை மாநகரப்பகுதியிலேயே, வாரம் ஒருமுறைதான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நடைமுறை இருந்தது அப்போது, நெல்லை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரை கிணறுகள் அமைந்த மணப்படை வீடு ஆற்றுப் படுகையின் பக்கம் இவர் பார்வை பட்டது.

இரு நாட்கள் அவர் இருந்ததெல்லாம் அந்த ஆற்றுப்படுகையில்தான். ஆற்றுக்குள் இருந்த உரைகிணற்றின் மீதேறி, அங்கு பணியிலிருந்த தொழிலாளிகளிடம் உரையாடி உற்சாகப்படுத்தன் விளைவு, தியாகராஜநகர் பகுதிக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைத்தது.

அடுத்து அவர் சென்ற மாவட்டம்தான் திருவாரூர். சென்ற இடத்திலெல்லாம் சிறந்த முத்திரை பதிப்பது அவர் வாடிக்கை. அப்படி அவர் பதித்த முத்திரைதான் இந்த நீர்மூழ்கி தடுப்பணை. அந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் விழுந்து கிடந்ததை அறிந்த அவர் முதலில் குளங்களில் தேங்கியுள்ள மழைநீரை, ஆழ்துளை மூலம் பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர முயற்சிகள் மேற்கொண்டார்.

தற்போது, நீடாமங்கலம் அருகே, வெண்ணாற்றின் குறுக்கே,125 மீட்டர் நீளம்,10மீட்டர் அகலத்தில் பள்ளம் தோண்டி, அதில் 8 மீட்டர் ஆழத்தில்,38,000 மணல் மூடைகளை தண்ணீர் புகாத, மக்காத தார்பாயில் அடுக்கி தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு, ஆற்று நீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்து, பூமிக்குள் நீரைச்செலுத்தி தேக்கிவைக்க உதவிடும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

கோடிகள் செலவிட்டு, ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மாற்றாக, லட்சங்களில் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார்.

இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...

ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்...

"பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்டை அரிசி கிடைக்கும்... ஆனால் இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...

நான் எடுத்து இருக்கேன்... அதற்காக அரசிடம் இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்... அமெரிக்க சனாதிபதி என்னுடைய தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு போயிருக்காரு. ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக மாட்டேங்குது... காரணம் இதக் கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க, உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப் போகும்...வெளிநாட்டுக் காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...

நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான் பண்ண முடியும்... அதுல ஆராய்ச்சி பண்ண முடியும்... நீங்க தான கணினி, இணையம் அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க... நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட பரப்பலாமே...செத்து போன மனுசனுக்குத் தான் உசுரக் கொடுக்க முடியாது... ஆனா செத்துப் போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்... இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."

அவர் பெயர் நாக இரத்தின நாயுடு (http://www.srinaidu.com/profile.htm)... அவரின் தோட்டத்தினைப் பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார் http://www.srinaidu.com/
தேவைபட்டால் தயங்காமல் பேசுங்கள் தமிழிலேயே பேசுவார்.

PROFILE
Sri Gudiwada Nagarathanam Naidu
58 Years
Chittoor Dt (Andhra Pradesh)
8-66 Gowtham Nagar Colony, Dilsukhnagar. Hyderabad
09440424463
04024063963
Farm Address
Taramathipeta VI, Hyathnagar Mandal, Rangareddy dist.

Thursday, July 11, 2013

காஞ்சி கைலைநாதர் ஆலயம்.

காஞ்சி கைலைநாதர் ஆலயம் பற்றிய தகவல்கள்:


காஞ்சி கைலாசநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது . ஹிந்து மத கடவுள் சிவாவிற்காக கட்டப்பட்டது .
கோவிலின் சுற்றுச்சுவர் மணற்கற்களால் , அதன் மேல் தெய்வங்களின் வாகனங்கள் என்று நம்பப்பட்ட சிற்ப்பங்களின் அமைப்புடன் கட்டப்பட்டு உள்ளது.இன்று இந்த கோவில் அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பல்லவர்கள் காலத்தில் கி.பி 8ம் நுற்றாண்டில் பல்லவ மன்னன் 2ம் நரசிம்மன் அவர்களால் கட்டப்பட்டது . கோவிலின் விமானம் மிகவும் அற்புதமாகவும் நடராஜரின் வெவ்வேறு விதமான தோற்றங்கள் உடன் கட்டப்பட்டு உள்ளது .
முதலாம் ராஜராஜ சோழர் அவர்களால் " காஞ்சிபெட்டு பெரிய திருக்கற்றளி "
( கற்களால் அமையப்பெற்ற பெரிய திருக்கோவில் ) என்று சொல்லப்பட்டும் மற்றும் தஞ்சை பிரகதிஸ்வரர் கோவில் கட்ட தூண்டுதலாக இருந்து என்றும்
மேற்கண்ட  தகவல்களை வரலாறு நமக்கு தருகின்றது.

ள  சிறப்பு : 
    உள் பரிகாரத்தில் கடவுளின் கருவறையை சுற்றிவர சிறிய குகை போன்ற பாதை அமைக்கப்பட்டுள்ளது . அது இந்த மனித வாழ்வின் , வாழ்வியலான பிறப்பையும் இறப்பையும் குறிக்கின்றது.
       குகைக்கில் நுழைதல் இறப்பையும் , வெளி வருதல் பிறப்பையும் , இதற்கு 
மூலம் கடவுள் என்பதையும், பிறப்பில் அனைவரும் கடவுளின் முன்பு சமம் என்பதையும் குறிக்கின்றது.
   உடற்கட்டு உள்ளவர்கள் இந்த பாதையின் வாயிலாக செல்ல இயலாது என்பதையும் வருத்தத்துடன் இங்கு பதிவு செய்கின்றேன்.