Tuesday, August 20, 2013

"கொங்கு நாட்டு சிற்ப ஸ்தலம்" - திருப்பூர்

"கொங்கு நாட்டு சிற்ப ஸ்தலம்"

சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை அர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது.

திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில், பாண்டிய மன்னர்களாலும் சோழர்களாலும் கட்டப்பட்டுள்ள இந்த "சுக்ரீஸ்வரர் கோயில்" குறித்த வரலாறும் விவரமும் இது வரை மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை. கி.பி.12 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. தற்போது மத்திய தொல்லியல் துறையால் "பாதுகாகப்பட்ட சின்னமாக" அறிவிக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்.

1) அம்மனுக்கென தனி கோயிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது.

2) அம்மனுக்கென தனி கோயில்,கோயிலின் வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

3)கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4)ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில்.

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.

6) கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.
நன்றி : சசிதரன்







No comments:

Post a Comment