Wednesday, September 29, 2021

சுயநலம்

தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று, இன்று நாம் இருக்கும் நிலைக்கு நம்முடைய வாழ்வியல் முறைகளே காரணம்.

கூட்டு குடும்பமாக நாம் இன்று வாழ விரும்பவில்லை. காரணம் , தேடிக்கொண்ட வாழ்வியல் சூழல்.  

இந்த வாழ்வியல் சூழல் , நம் உறவுகளை நம் பிள்ளைகளுக்கு அடையாளப்படுத்த, உறவுகளை மேம்படுத்த , எப்படி உதவும்?. 
இவைகளை நாம் களைய முற்படவில்லை என்பதும் உண்மை.

உறவுகளை சொல்லித்தர நாம் தயாராக இருக்க வேண்டும். முதலில் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். அனைவரும் உறவுகளை விட்டு தள்ளி இருக்க காரணம் பணம். பணம் கொண்டு பகை வளர்த்த காரணத்தால் எட்ட நிற்க வேண்டிய நிலை.

இந்த பணம் சம்பாதிக்க செல்லும் போது வரும் புது உறவுகள் சில மட்டுமே உண்மையாக இருக்கும்.

அங்கிள், ஆன்டி என்று சொல்லி தரும் நாம், அந்த வார்த்தைகளை பிள்ளைகள் பேசும்போது பெருமைப்படும் நாம், சரியான முறையில் உறவுகளை சொல்லி தந்தால் நன்று.

ஏன் என்றால், குலம் , கோத்திரம் என்று சொல்லுவார்கள். நம்மில் எத்தனை பேருக்கு இன்று உங்களின் குலப்பெயர், கோத்திரம் தெரியும்?

என்ன காரணத்திற்காக இவைகள் உண்டானது?
நாம் ஒருவரின் காரிய சடங்கு செய்யும் பொழுது மூன்று தலைமுறை வம்சாவளி முன்னோர் பெயரை சொல்ல வேண்டும். 
எத்தனை பேருக்கு இவைகள் தெரியும்?

உடன் பிறந்தவர்களை தவிர யாரையும் திருமணம் செய்யலாம் என்ற  ஒரு முறை இன்று நம் சமகால வாழ்வில் வளர்ந்து வருகின்றது. 

குலம் , உண்டானது இது போன்ற முறைகள் வராமல் இருக்க உருவாக்கப்பட்டது. நாம் பின்பற்ற தவறியதால் , உறவு முறையில் அண்ணன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்கின்ற உலகில் வாழ்கின்றோம்.

சரி, ஒரு சிறு சந்தேகம்,

இஸ்லாம் விஸ்தரிக்க முயற்சி செய்வதின் விளைவு நம் கண்முன் நடக்கும் போர்கள்.


ஏன் கிருஸ்துவம் மட்டும் உலகம் முழுவதும் பரவி வருகின்றது?
பரப்பப்படுகின்றது? 

என்ன நோக்கம்? என்ன பயன்?

உதவிகள் செய்ய , உதவிகள் பெற மதம் என்ன கருவியா?

மதம் கடந்து , மனம் விரும்பி திருமணம் செய்யும் பொழுது எங்கிருந்து வந்தது மதம்?

இந்து மதம் சார்ந்த நபர் மட்டும் மதம் மாறவேண்டும். மற்ற மதத்தை தேடி சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
ஆனால், இந்த திருமணத்தில் இந்து மதம் சார்ந்த வீட்டார் , பிள்ளைகளின் மனம் போல வாழ வழி விடுகின்றனர். மதம் மாறுகின்றனர். மற்ற மதத்தில் சிலர் மட்டும் மதம் கடந்து பார்க்கும் பார்க்கின்றனர்.

மதம் மாற வில்லை என்றால் , திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி மற்ற மதத்தினர் , அவர்களின் பிள்ளைகளின் நலன் கடந்து மதத்தின் மீது பற்று கொள்கின்றனர்.

எல்லாம் சம்மதம் என்று சொல்லும் இந்து மதம் மட்டும் எல்லோருக்கும் கசக்கிறது.


சுயநலமாக வாழ தொடங்கியதால் வந்தது.


தொடரும் ... பகுதி 6...




Monday, September 27, 2021

குல தெய்வம்

குலதெய்வம் என்று கூறி வழிபாடு செய்கின்றோம்.
யார் குலதெய்வம் ?

உனக்கு தெரிந்து உன் தந்தை உன் வழிகாட்டி. உன் தாத்தா உன் முன்னோர், உன் தந்தைக்கு வழிகாட்டி.

இது போன்ற முன்னோர், குலம் காத்தவர், குலம் வாழ வழி தந்தவர்.
இவர்களை தான் நாம் தெய்வமாய் வழிபடுகிறோம். 
மற்ற மதங்களில் இந்த முன்னோர் வழிபாடு கிடையாது.

இஸ்லாம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தது.
கிறித்துவம் வெள்ளையர்களின் வருகையால் வந்தது.

அடிமை முறையை ஏற்றுக்கொண்ட சிலர் மதம் மாறினர். அவர்களின் வழி வந்தவர்கள் அதை தொடர்ந்து வருகின்றனர். 

ஆனால், இப்பொழுது மதம் மாற்றம் செய்யப்படும் பலரும் லாபம் சார்ந்த தொழிலாக பார்க்கின்றனர்.

பிழைக்க ஒரு மதம், படிப்பு ,வேலை  இட ஒதுக்கீடு என்று வரும் பொழுது மற்ற மதம் என்றும், மற்ற சாதி என்றும் கூறி வருவதை பார்க்க முடியும்.

சமயம் பற்றிய ஆய்வும், மொழி பற்றிய பகுப்பாய்வும் இல்லாத அளவுக்கு பணம், மேம்பட்ட  வாழ்நிலை மீது கொண்ட ஈர்பும் நம்மை நம்முடைய மண் மீதும் அக்கறை குறைய காரணம் ஆனது.

மதம் சார்ந்த தொழிலாக அரசியல் அமைப்புக்கள் மாறியது மேலும் நம் மதம் நசுக்க படும் என்ற அட்சத்தை உருவாக்கி உள்ளது. 

இந்த மாற்றங்கள் ஏதோ அரசியலால் நடந்தது என்று புறம் தள்ள இயலாது.
நாம் சுயநலமாக வாழ தொடங்கியதில் இருந்து வந்தது.

தொடரும் ... பகுதி 5

Wednesday, September 15, 2021

ரசாயனத்திடம் பாடம் கற்று இயற்கைக்கு மாறினேன்

ரசாயனத்திடம் பாடம் கற்று இயற்கைக்கு மாறினேன்


ஒன்பது ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்தேன். நல்ல சாகுபடி நிறைய விளைச்சல். பூச்சித்தொல்லைக்காக மருந்து தெளித்தேன். மண்ணும் பயிர்களும் வீணானது. முருங்கையை அழித்து விட்டு மொத்தமாக இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன் என்கிறார் மதுரை திருமங்கலம் சவுடார்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுப்புராஜ்.

இயற்கை என்றால் விதைகள் முதல் உரம், பூச்சிக்கொல்லி அனைத்தையும் வயலிலேயே தயாரித்து விளைச்சலை பெருக்கும் நுட்பத்தை விவரிக்கிறார் சுப்புராஜ்.
நானும் மனைவி பாரதியும் தோட்டத்தை பராமரிக்கிறோம். எங்களிடம் 3 நாட்டு மாடுகள் உள்ளன. அதன் மூலம் ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். இயற்கை உரங்களை தண்ணீரில் கரைத்து சொட்டுநீர் முறையில் பயிருக்கு பாய்ச்சுகிறோம். மொத்த முள்ள 33 ஏக்கரிலும் இயற்கை விவசாயம் தான். ஏக்கர் வாரியாக பிரித்து நாரத்தை, அத்தி, சீத்தா, கொய்யா, கொடுக்காபுளி, நாவல், சப்போட்டா, நெல்லிக்காய், சிவப்பு கொய்யா மரங்களை பராமரிக்கிறேன்.

திருமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரபா வழிகாட்டுதலில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு எக்டேர் கொடுக்காப்புளிக்கு ரூ.20ஆயிரம், அரை எக்டேர் அத்திக்கு ரூ.15 ஆயிரம் மானியம் பெற்றோம். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் அடர்நடவு கொய்யா 1.20 எக்டேர் சாகுபடிக்கு ரூ.21ஆயிரத்து120 மானியம், சொட்டு நீர் பாசனத்தின் கீழ் 4.71 எக்டேருக்கு ரூ.ஒரு லட்சத்து 81ஆயிரத்து 417 மானியம் பெற்றோம். மனைவி பாரதியின் பெயரில் 3.78 எக்டேர் சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.ஒரு லட்சத்து 14ஆயிரத்து 400 மானியம் பெற்றுள்ளோம்.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறைக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

தோட்டத்தில் உள்ள இலை, தழைகளை மட்க செய்து குப்பை உரமாக மாற்றுவேன். வாரந்தோறும் குப்பை உரம், ஜீவாமிர்தம், எருக்கஞ்செடி சாறு, நுண்ணுாட்ட கரைசல் என தேவைக்கேற்ப கலந்து பயிருக்கு பாய்ச்சுகிறேன். எருக்கஞ்செடியை கிளைகளுடன் பறித்து சிறு துண்டுகளாக வெட்டி 200 லிட்டர் தண்ணீரில் 10 நாட்கள் ஊறவைக்கிறோம். தினமும் நன்றாக கலக்கி விட்ட பின் அதை கொய்யா, அத்தி மரங்களுக்கு பாய்ச்சுவதால் போரான் சத்துகள் கிடைக்கிறது. இதுதவிர மீன் அமிலமும் தயாரிக்கிறோம்.
பூச்சிக்கொல்லிக்கு இயற்கை முறையில் பயிர்களுக்கும் மண்ணுக்கும் பாதுகாப்பான திரவ மருந்துகளை பயன்படுத்துகிறேன்.

ஜீவாமிர்தம் பாய்ச்சினாலே மண்ணின் தன்மை பொலபொலப்பாகும். மண்புழுக்கள் பெருகும். மண்புழு உரம் தனியாக கொடுக்க வேண்டியதில்லை. எந்த இடத்தையும் எந்த சூழ்நிலையிலும் தரிசாக விடுவதில்லை. அவ்வப்போது பசுந்தாள் பயிர்களை நடவு செய்து மடக்கி உழுது மண்ணை பொன்னாக்குகிறோம். இதனால் மண்ணும் மனிதனுக்கும் கேடில்லாத இயற்கையான பழங்களை உற்பத்தி செய்யும் மனதிருப்தி கிடைக்கிறது
என்றார். அலைபேசி: 99408 33727.
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை