Tuesday, August 31, 2021

சித்தர் பாடல்கள்

சித்தர் பெருமகனார்

சித்தர்களின் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய 

நூல்களும் இங்கு தரவிறக்கம்


அனைத்து விதமான நூல்களும் இங்கு தரவிறக்கம் செய்யலாம்.


https://noolaham.org/wiki/index.php?


இப்படிக்கு

விவசாயி

நான் இந்து - பகுதி 3

இந்து மதத்தின் அடிப்படை கட்டமைப்பு, சேவைகள் பற்றிய புரிதல் வேண்டும்.

அந்த புரிதல் உள்ளவர்களும் செய்யும் பிழை என்ன என்றால், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தவறியது.

வீடுகளில் தினமும் சாமி கும்பிடும் நாம் , நம் குழந்தைகளுக்கு இதை தினமும் செய்ய வேண்டும் என்று சொல்லி நடைமுறை படுத்தாமல் விட்டு விட்டோம்.

ஆனால் மற்ற மதங்களில் இதை தினமும் செய்ய பழக்கப்படுத்த படுகின்றனர்.
அவர்களும் இந்த உயர்ந்த இந்து மதத்தில் இருந்து சென்றோரே.

வாரத்தில் குறைந்தது எத்தனை முறை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றோம் என்று எண்ணி பார்க்க வேண்டும்.
நம் குடும்பத்தில் எத்தனை நபர்கள் இதை செய்கின்றோம் என்று கவனமாக பார்க்க  வேண்டும்.

வாழ்கையில் பழக்கவழக்கங்கள் ஒன்று இருந்து அதை தினமும் நம் இன்றைய தலைமுறையும் தொடர்ந்தால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

இந்த இந்து மதத்தில் உள்ளது போன்ற
சுதந்திரமான வழிபாட்டு முறைகளும் கட்டுப்பாடுகளும் வேறு எந்த மதத்தில் நமக்கு மத்தியல் இல்லை.

நம் கோயிலுக்கு இந்த மதம் சேர்ந்த அனைவரும் வரலாம் என்று தான் உள்ளது.
மாதம் சந்தா கட்டணம் செலுத்தும் முறை கோயிலுக்கு இல்லை.
இந்த கோயிலுக்கு மட்டுமே வரவும், செல்லவும் அனுமதி என்ற அடிமை முறை நம் மதத்தில் இல்லை.

சமூக பாதுகாப்பு சேவைகள் என்று சொல்லி, மதம் மாற்றும் முறையும் நம்மில் இல்லை.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கண்ட 
(சமூக பாதுகாப்பு சேவைகள் என்று சொல்லி, மதம் மாற்றும்) முறைக்கு உதாரணம்.

ஆனால் நம் மதத்தில் இருந்து செல்லும் அனைவரும் ஒன்றை மறந்து விட்டார்கள்.

மேலே கூறிய வழிபாட்டு முறைகளை இந்த இந்து மதத்தில் இருந்தது வரை கண்டு கொள்ளாதவர்கள், மற்ற மதத்திற்கு சென்ற பின்பு , செய்யும் வழிபாடுகளை கண்டால், நமக்கே சற்று அய்யம் வராமல் இல்லை.

நம் மதத்தில் என்ன தவறு கண்டு?, என்ன குறைகளை கண்டு?, மற்ற மதத்தை தேடி சென்று சேர்ந்தோம்?  

நம் இந்து மதத்தை நாம் சரியாக புரிந்து கொண்டு இருக்கின்றோமா?

மதங்களை கடந்தது தான், "அன்பு".
ஆனால், அந்த அன்பையும் கொண்டு மதமாற்றம் செய்யும் நிலை மிகவும் கவலைக்குரியது.


தொடரும் .... பகுதி 4

Thursday, August 26, 2021

நான் இந்து - 2

இன்று உலகம் முழுவதும் யோகா ஒரு கலை, உடல் நலம் காக்க உதவும் ஒரு உடற்பயிற்சி என்று ஏற்று கொண்டுள்ள போதும் சிலர் மட்டும் இதை இந்து மதம் சார்ந்தது என்று சொல்லி , தன் சந்ததியினர் இந்த உடற்பயிற்சி கற்க தடையாய் உள்ளனர்.

ஆனால் நம் இந்து மதம் சொல்லுவது ,

விடியலில் எழுந்து உடல் தேகம் காக்க , ஆசனங்கள் செய்ய வேண்டும். மூச்சுப்பயிற்சி  முக்கியம்.

குளியல், சூரிய நமஸ்காரம் என்று தினமும் வர வேண்டும்,

பஞ்சபூதங்கள் என்று சொல்லும் 

காற்று, நிலம் , நீர் , நெருப்பு , ஆகாயம் என்று விடியலில் வணங்க வேண்டிய இயற்கை வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது.

இந்த இயற்கை நமக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் பொது.
ஆனால் அதையும் மதம் சார்ந்து புறந்தள்ளிவிட்டனர், இன்னும் ஒரு படி மேலே, இது பிராமணர்களுக்கு என்று சொல்லி இந்த மதத்தில் உள் பிரிவு வேலைகள் செய்யப்பட்டு உள்ளது.

தற்சமயம் ஒரு விழிப்பு உணர்வு வந்து உள்ளது.

பள்ளியில் படிக்கும் போது மாலை வேளையில் ஆசனங்கள் கற்று தரப்படும். அன்று ஏதோ என்று கற்றுக்கொண்டோம்.

இந்து மதம் காலத்தின் சுழற்சிக்கு ஏற்ப
தன்னை , தன் அடையாளங்களை விட்டு விடாமல் இன்றும் தன்னை மெருகேற்றி வளர்ந்து வருகிறது.

இந்து மதத்தின் அடிப்படை கட்டமைப்பு வேதங்கள் நிறைந்தது.

நான்கு வேதங்கள் :

ரிக், யசூர், சாம , அதர்வண வேதங்கள்.

இந்த வேதங்கள் இயற்கை வழிபாடுகள் ,
உருவம் சார்ந்த வழிபாடுகள் என்று இருந்தது.

இன்றும் நம்மில் பலருக்கும் தெரிந்த மிகவும் பரிச்சயமான பில்லி, சூனியம் போன்றவை அதர்வண வேத வழிபாட்டுமுறைகள்.

மலையாள தேசத்து அந்தணர்களில் ஒரு சாரர் அதர்வண வேதங்கள் மீது பற்று கொண்டோர்.
இதற்கு என்று வழிபாட்டு தலங்களும் உள்ளன.

நம் மக்களுக்கு மிகவும் அவசியமான
ஒன்று என்றால் அது "திருக்குறள்", "திருவாசகம்" , "ஆத்திச்சூடி" .

மற்ற வேதங்கள் இயற்கை வழிபாடுகளை , உருவ வழிபாடுகளை முன் வைக்கின்றது. 

ஒரு அடி ஆத்திச்சூடி, இரு அடி குறள் தரும் மேன்மையான உன்னதமான வாழ்வியலை சொல்லும் நூல் உலகில் வேறு இல்லை, வேறு மதங்களிலும் இல்லை.




தொடரும்..... பகுதி-3



Tuesday, August 24, 2021

பார்த்தீனிய களையை அழிக்கும் மெக்சின் வண்டுகள்

பார்த்தீனிய களை


பயிர்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பார்த்தீனியம் களைச்செடி.
அமெரிக்காவை தாயகமாக கொண்ட பார்த்தீனியம் என்ற நச்சு களைச்செடி 1955 ல் வெளிநாட்டு தானியங்களுடன் இந்தியாவிற்குள் இறக்குமதியானது. எல்லா சூழ்நிலையிலும் வளரும் இக்களை இந்தியாவில் 7.7 கோடி எக்டேர் பரப்பளவில் பரவி மனித நலத்திற்கு தீங்கு விளைவித்து வருகிறது.
பார்த்தீனியத்தில் உள்ள பார்த்தினின், கொரனாபிலின், டெட்ரநியூரிஸ், அம்புரோசின் போன்ற நச்சுப் பொருட்களால் தோல், கண் அரிப்பு, வெடிப்பு, கொப்புளம் உருவாகிறது. பால்மாடுகள் இக்களை செடிகளை உண்பதால் அதன் பாலிலும் நச்சுதன்மை கலக்கிறது. பயிர்களில் 70 சதவீத மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பல்லுயிர் பெருக்கம் குறைகின்றது.
இத்தாவரத்தின் வயது 3 முதல் 4 மாதங்கள். அக்டோபர் - டிசம்பரில் இதன் வளர்ச்சி அதிகம். ஒவ்வொரு செடியும் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் விதைகளை உருவாக்குகிறது. ஒரு சதுர மீட்டர் மண்ணில் லட்சம் விதைகள் புதைந்து கிடக்கின்றன. இவற்றுக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக உயிர் இருக்கும். எனவே விதைகள் முளைக்கும் முன்பும் முளைத்த செடிகள் விதை உண்டாவதற்கு முன்பும் கட்டுப்படுத்த வேண்டும்.
முளைப்பதற்கு முன் எக்டேருக்கு இரண்டரை கிலோ அட்ரசின் களைக்கொல்லி பயன்படுத்தலாம். செடியானது பூக்கும் முன் 200 கிராம் உப்பு, ஒரு மில்லி சோப்பை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். 10 மில்லி கிளைப்போசேட், 20 கிராம் அம்மோனியம் சல்பேட், 2 மில்லி சோப்பு திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது 3 மில்லி மெட்ரிபுசின், 2 மில்லி சோப்பு திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம்.
பூப்பதற்கு முன் கையுறை அணிந்து அல்லது கருவியின் மூலம் செடியை வேருடன் பிடுங்கி எரிக்க வேண்டும். தரிசு நிலங்களில் அடர் ஆவாரை, துத்தி வகை செடிகளை வளரச் செய்தால் இவற்றின் வளர்ச்சி குறையும். மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளரும் தாவர இனங்களை ஊக்குவிக்கலாம். பார்த்தீனியம் செடியை தின்று அழிக்கும் 'சைக்கோகிராமா பைக்கலரேட்டா' என்ற மெக்சிகன் வண்டுகளை பரவச் செய்யலாம். இந்த வண்டுகள் மழைக்காலங்களில் மட்டும் சிறப்பாக செயல்படும். அல்லது செடியை வேருடன் அகற்றி சிறிதாக வெட்டி மட்க வைத்து உரமாக்கலாம்.

முரளி அர்த்தனாரி
இணைப்பேராசிரியர்
சின்னமுத்து
துறைத்தலைவர் உழவியல் துறை கோவை வேளாண்மை பல்கலை
0422 - 661 1246


நன்றி தினமலர்:

https://m.dinamalar.com/weeklydetail.php?id=57339