Tuesday, August 17, 2021

ஒரு நீண்ட பயணம் ....

ஒரு நீண்ட பயணம் ....

வாழ்க்கையில்  ஒரு நீண்ட பயணம் செல்ல எல்லோரும் விரும்புவோம் .
சிலருக்கு இந்த நீண்ட பயணம் செல்ல விருப்பம் இருப்பினும் உடன் வரும் துணை , யார்? என்பதில் தான் , பயணம் வேண்டுமா ? இல்லையா ? என்பதை தீர்மானிப்பர் .

பயணங்கள் வாழ்வின் இறுதி வரை இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒருவரால் மட்டுமே "பயணங்கள் என்றும் முடிவதில்லை".


ஒரு நீண்ட பயணம் என்பது, 

பயணத்தின் தூரமா?, 
பயணிக்கின்ற நபரின் எண்ணத்தின் தூரமா? 

இதை எப்படி உணர்வது அல்லது சொல்வது?.

பயணியின் வயதும் , அவரின் வாழ்வியல் முறைகளும் இந்த பயணத்தில் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும்.

சரி, பயணம் என்பது எது?, 

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்படுவதா ?

வாழ்க்கையின் கால நிலைகளா ?

அதாவது பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கும் கால நிலைகளா


பணம் கொண்டு மற்றவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட  உயர்வு தாழ்வு நிலைகளா , இந்த சுழற்சியில் அகப்பட்டு மீண்டு வருதலா,

எதை நாம் பயணம் என்று கூற முடியும்

பயணத்தின் தன்மை தங்களின் சொந்த அனுபவம் ஆக மட்டுமே இருக்கும்.



No comments:

Post a Comment