Wednesday, May 13, 2020

கொரோனாவும்? சீனாவும்? சந்தேகங்களும்?

         கொரோனா என பெயரிடப்பட்ட covid-19 வைரஸ் சீனா எனும் நம் அண்டை நாட்டில் உயிர் பெற்று இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ளது . இதனின் கோர பிடியில் சிக்கி உலகம் திணறுகிறது . 

இந்த நிலையில் உலகம் முழுவதும் சீனா மீது கோபம் கொண்டும் இனி வரும் காலங்களில் சீனா வை என்ன செய்யலாம் என்றும்,  எப்படி தண்டிப்பது என்றும் , தன் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்று சிந்திக்கும் இந்த நேரத்தில்,

 உலகமே பரபரப்புடன் இருக்க, சீனா மட்டும் தன்னுடைய நாட்டில் வுஹான் மகாணத்தில் அனைத்து விதமான நிகழ்வுகளும், தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதி கொடுத்து தன் நாட்டில் கொரோனா வை கட்டுப்படித்தி விட்டதாக சொல்லி , எப்பவும் போல இயங்க அனுமதி கொடுத்து உள்ளது எனக்கு ஒரு சிறு நெருடலை தருகிறது .

உலகில் பலர் சொல்லுவதையும் கேட்டுக்கொண்டு தான் உள்ளோம்.
அதாவது , சீனா கொரோனாவை பரப்பியது, அத்துடன் சரியான தகவல்களை தரவும் இல்லை , அதனாலே இன்று அனைவரும் துன்பத்தில் இருக்கின்றோம், என்று.

சீனாவின் வுஹான் மகாணத்தில் முதல் தோற்று தொடங்கி இன்று உலகின் எல்லா திசைகளில் எல்லை இன்றி பரவிவரும் நிலையில் , சீனாவில் மட்டும் எப்படி கட்டுக்குள் இருந்தது? என்று மிக பெரிய சந்தேகம் வலுக்கிறது.

சரி என்னுடைய சந்தேகம் சிலருக்கும் இருக்கும் . உலகம் சொல்லியும் இருக்கலாம். எனக்கு தெரியவில்லை. இந்த சந்தேகம் உலகிற்கு இருக்கும் என்றால் இந்நேரம் சீனா வை தனிமை படுத்தி இருக்க வேண்டும்.

சந்தேகத்திருக்கு வருவோம் . 

1. இந்த கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவ புதுவருட பிறப்பு தான் காரணம் என்றும், புத்தாண்டிற்கு வந்து சென்ற சீனர்களின் மூலமாக பரவியது என்றும்  சீனாவும் மற்ற நாடுகளும் சொல்லும் இந்த நிலையில் என்னுடைய சந்தேகம்,
        
                ஏன் சீனாவின் மற்ற மாகாணத்திற்கு பரவவில்லை ?

2.   உலகம் முழுதும் உள்ளவர்கள் வந்த நிலையில்,
     மற்ற மகாணத்தில் இருந்து எப்படி யாரும் வரவில்லையா ? ஏன் வரவில்லை ?  

3. புத்தாண்டிற்கு வந்து சென்ற சீனர்களின் மூலமாக பரவியது என்றால் , 
    உள் நாட்டில் இருந்து  வந்தவர்களுக்கு பரவவில்லையா? ஏன் பரவில்லை ?


4.இந்த மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவ முடியும் என்றால், 
      ஏன்சீனாவின் மற்ற மாகாணத்திற்கு பரவவில்லை ? எப்படி தடிக்கப்பட்டது ?

5. அப்படி தடுப்பது சாத்தியம் என்றால் , 
     ஏன் உலகம் முழுவதும் பரவ சீனா அனுமதித்தது? ஏன் தடுக்கவில்லை?

6. உலகம் முழுவதும் விமான சேவை தடுக்க பட்ட நிலையில் ,                         குறிப்பாக ஐரோப்பிய , அமெரிக்கா தேசத்திற்கு மட்டும் ஏன் 
சீனா தன் "சீனவிமானங்களை" இயக்கியது ?

7. ஒரு வேலை , விமான நிலையங்களின் மூலமாக , குறிப்பாக பயணியருக்கு கொடுத்த உணவின் மூலமாக பரப்பியதா? குறிப்பாக பயணத்தில் வேற என்ன மாதிரியான பொருட்கள் பயன்படுத்தினார்கள்?

8. சீனாவிலிருந்து சென்ற சீனர்களின் மூலம் தான் பரவியது என்று சீனா சொன்னதால் , 
     மற்ற நாடுகளில் பாதிப்பிற்குள்ளான சீனர்களின் எண்ணிக்கை?          அவர்களின் பயண நிலைகள் அனைத்தும் உண்மையா ?

9. இந்த சீனர்களுக்கு உண்மையில் கொரோனா இருந்ததா ?             உருதிபடுத்தப்பட்டார்களா?

10. சீனா ஏன் செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் வெண்டிலேடர் , முககவசம் செய்யும் புது கம்பெனிகளை அதிக எண்ணிக்கையில் தொடங்கியது ?




இப்படிக்கு

விவசாயி