Saturday, August 21, 2021

நான் இந்து .....

""நான் இந்து", இந்த ஒரு வார்த்தை தங்களை, தங்களுடைய எண்ணத்தை ஒரு இடத்தில் தொட, தொடர முயற்சி செய்கிறது.

நெற்றியில் திருநீறு, குங்குமம் , சந்தனம் இட்டு கொள்வதை தவிர்ப்பது , இட்டு கொண்டாரை பார்த்ததும் , இகல்வதும் இன்றைய " மாக்களின் "  வளர்ச்சி.

தான் பிறந்த மதத்தை இகல்வதும் பெற்று எடுத்த தாயை இகல்வதும் ஒன்றே.

"இந்து" மதம் இது வரை எண்ணற்ற தடைகளை கடந்து இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.

சரி, "இந்து மதம்" என்பதுஒரு மதமா?

இல்லை , இது ஒரு வாழ்வியல் முறை.
இந்த வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட ஒரு சமயம் "இந்து மதம்" என்று சொல்லப்படுகிறது. 

வேறு என்ன இந்த மதத்தில் உள்ளது?

இங்கு நாம் பேசும் மொழி தொடங்கி, கற்க வேண்டிய கலைகள் முதல், இயற்றப்பட்ட நூல்கள் தழுவி, வாழ்வியல் முறையை அமைத்து,  ஒழுங்கு படுத்தி அடுத்த தலைமுறைக்கு தந்து உள்ளது.

இன்றும் வானியல் ஆய்வு செய்ய திணறும் நம் சம கால வாழ்கையில், இங்கு நம் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டு பவுர்ணமி அமாவாசை கிரகணம் இவற்றை ஒரு வருடத்திற்கு முன்பே கணித்து பஞ்சாங்கம் என்று தரும் கணக்கியல் நம் இந்து மதமே.

மற்ற மதங்களில் இது போன்ற நாள், கோள் ,சூரியன் ,சந்திரன் ,உதயம், மறைவு குறித்து கணக்கியல் இல்லை.

இந்தக் கணக்கியல் பற்றி நமக்கு என்ன தெரியும்?
இன்று நம் வீடுகளில் இந்த பஞ்சாங்கம் உள்ளதா?
பஞ்சாங்கம் பார்த்து நாழிகை , நல்ல நேரம் , சுப ஓரைகள் , நாள் , நட்சத்திரம் பார்க்க தெரியுமா? 

கற்றுக்கொள்ளாததும், கற்றுக்கொடுக்காததும் இன்று இருக்கும் இந்த தலைமுறை குறைகளே. 

பணம் பணம் என்று குலம் தந்த முன்னோரையும் அவர்கள் வணங்கிய குலம் காத்த தெய்வங்களை வழிபடும் முறையை மறந்ததும் , வளர்ச்சியாக கொண்டாடும் மனநிலையில் இருப்பதும் தடம் மாறியதின் அறிகுறிகள் தானே அன்றி சரியானஅறிகுறிகள் அல்ல.




தொடரும்.......



No comments:

Post a Comment