Monday, June 24, 2013

முருகன் மற்றும் கரப்பான்பூச்சி உணவகம்

         சென்னையில் ஒரு பகுதி . கே.கே.நகர். அங்கு உள்ள ஒரு உணவகத்தின் பெயர் தான் கரப்பான்பூச்சி உணவகம். இந்த உணவகத்துக்கும் முருகனுக்கும் தொடர்பு உள்ளது.அதை பின்னால் பார்க்கலாம் .
           ஆம்  வாழ்க்கையில் இன்று ஒருவனின் வாழ்க்கை வரலாறை கேட்க்கும் நிலை உருவானது .அந்த உரையாடலை தொகுத்து தருகின்றேன் .நாம் வாழ்வில் இது போல சிலரை சந்தித்து இருப்போம் என்று நம்பிக்கையில் இதை எழுதுகின்றேன் .
           நான் இரவு உணவு உண்ணும் உணவகம் தான் கரப்பான்பூச்சி உணவகம்.
அங்கு வேலை செய்யும் சிறுவனின் பெயர் விஜயராஜ். பிறப்பிடம் ஆந்திரா மாநிலம் ராமகிரி மாவட்டம், நாகலாபுரம். வயது 15. அம்மாவிற்கு பார்வை இல்லை. அப்பா மரணம் அடைந்து 15 வருடங்கள் ஆகின்றது.அக்காள் திருமணம் முடித்து அவர்களின் பெண் குழந்தைக்கும் திருமணம் முடிந்தது. அப்படியானால், பெண் குழந்தை வயது ?. ஆம் என் முதல் கேள்வி இது தான்.
     ஊருக்கு பொங்கலுக்கு மட்டும் செல்வானாம். இதை எளிதாக சுருங்க சொல்லிவிட்டேன் . கண்கூடக அவனின் அசைவுகளின் நடுவில் இருந்தால் என்னால் சொல்ல இயலவில்லை.சிரிப்பு அறவே இன்றி அவன் சொன்னது மனதை சில நிமிடம் நிறுத்துகின்றது.ஆம்  இந்த வேகமான வாழ்க்கையில் எதையும் எதிர் நோக்காமல் வரும் பொங்கலுக்கு ஊருக்கு செல்ல, எதிர் நோக்கும் அவனின் வாழ்க்கை போராட்டம் 5ம் வகுப்போடு அவனின் கல்விக்கும் வேட்டு வைத்து விட்டது.பார்த்த உடன் தெரியும், அவன் சற்று நிறுத்தி கற்கும் மனநிலை உடையவன் என்று.ஆனால் அவன் வாழ்க்கையில் போராடும் போராட்டம் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவே இதை தருகின்றேன். அனுதாபம் பட தரவில்லை.

ஆம்  நம்மிடம் இது போல விஜயராஜ் பலர் இருக்கின்றார்கள். காரணம் படிப்பறிவு குறைவும், பணமும் தான். சற்று  சிந்திப்போம் .........

சரி, முருகன் மற்றும் கரப்பான்பூச்சி உணவகம் . கரப்பான்பூச்சி உணவகம்-இது பட்டை பெயர். உண்மையான பெயர் சண்முகநாதர் உணவகம்.
கிட்டதட்ட 4 வருடங்களாக அங்கு இரவு உணவு உண்ணும் எனக்கு இதுவரை  கரப்பான்பூச்சி வந்தது இல்லை. என் சக நண்பரும் நானும் ஒரு முறை உணவு உண்ணும் பொழுது அவருக்கு மட்டும் கரப்பான்பூச்சி-யுடன் உணவு பரிமாறப்பட்டது. இது நடந்து 3 வருடங்கள் ஆகின்றது. அதன் பின் அவர் என்னை காண வந்தாலும் அங்கு மட்டும் உணவு உண்ண வரமாட்டார் .
இப்பொழுது விளங்கியதா "முருகன் மற்றும் கரப்பான்பூச்சி உணவகம்"....


With Love UR's
Murali_Jasmine
24/06/2013.



Friday, June 7, 2013

கிராமம்-ஆரம்பம்......

கிராமம் இந்த வார்த்தையின் உச்சரிப்பில் ஏதோ ஒன்று உள்ளது. அதனால் தான் மனது எத்தனை சஞ்சலத்தில் இறந்தாலும் ஒரு அமைதியை எடுத்து முன் வைக்கின்றது . ஆம் நானும் கிராமத்து வாசி தான்.
       ஒவ்வொருவர் பார்வையிலும் இந்த கிராமம் மாறுபடும். படங்களில் கிராமத்தை கண்டவர்களுக்கு , அதன் பின்னணியில் ஒரு கிராமம் மனக்கண் முன்னாடி நிழலாடும் !.........

வைரமுத்து - கருவாச்சி காவியம் ( Karuvachi Kaviyam By Mr.Vairamuthu )

https://docs.google.com/file/d/0B7vzSvrIEcbYR2lDSDB1QjlERnM/edit?usp=sharing

வைரமுத்து அவர்களின்  கருவாச்சி காவியம்.

6 மாத இடைவெளி

6 மாத இடைவெளி மனிதனை எத்துனை மாற்றங்களை ஏற்றக, இறக்க வைக்கின்றது.

ஆம் இந்த இடைப்பட்ட காலங்களில் எத்தன்னை இறப்புகள் , பிறப்புகள்
அத்தனையும் நம்மை சுற்றி என்றால் ....
ஓவ்வொரு மாதமும் ஒரு  இறப்பு ,,,
ஏற்கின்றோம் .....சற்று தயக்கத்துடன் ,,,,,,,
நம் வீடுகளில் ,,, அண்டை வீட்டில் ,,,,உறவுகளில் ,,,,,,
உடன் வேளை பார்கின்றவர்களின் வீடுகளில் ,,,,,,,,,,,,
பிறப்புகளை ஏற்கின்ற மனது இறப்புகளை சற்று தள்ளியே வைத்து பார்த்து பழகியது தான் இதற்கு காரணம்,,,,,