Thursday, August 26, 2021

நான் இந்து - 2

இன்று உலகம் முழுவதும் யோகா ஒரு கலை, உடல் நலம் காக்க உதவும் ஒரு உடற்பயிற்சி என்று ஏற்று கொண்டுள்ள போதும் சிலர் மட்டும் இதை இந்து மதம் சார்ந்தது என்று சொல்லி , தன் சந்ததியினர் இந்த உடற்பயிற்சி கற்க தடையாய் உள்ளனர்.

ஆனால் நம் இந்து மதம் சொல்லுவது ,

விடியலில் எழுந்து உடல் தேகம் காக்க , ஆசனங்கள் செய்ய வேண்டும். மூச்சுப்பயிற்சி  முக்கியம்.

குளியல், சூரிய நமஸ்காரம் என்று தினமும் வர வேண்டும்,

பஞ்சபூதங்கள் என்று சொல்லும் 

காற்று, நிலம் , நீர் , நெருப்பு , ஆகாயம் என்று விடியலில் வணங்க வேண்டிய இயற்கை வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது.

இந்த இயற்கை நமக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் பொது.
ஆனால் அதையும் மதம் சார்ந்து புறந்தள்ளிவிட்டனர், இன்னும் ஒரு படி மேலே, இது பிராமணர்களுக்கு என்று சொல்லி இந்த மதத்தில் உள் பிரிவு வேலைகள் செய்யப்பட்டு உள்ளது.

தற்சமயம் ஒரு விழிப்பு உணர்வு வந்து உள்ளது.

பள்ளியில் படிக்கும் போது மாலை வேளையில் ஆசனங்கள் கற்று தரப்படும். அன்று ஏதோ என்று கற்றுக்கொண்டோம்.

இந்து மதம் காலத்தின் சுழற்சிக்கு ஏற்ப
தன்னை , தன் அடையாளங்களை விட்டு விடாமல் இன்றும் தன்னை மெருகேற்றி வளர்ந்து வருகிறது.

இந்து மதத்தின் அடிப்படை கட்டமைப்பு வேதங்கள் நிறைந்தது.

நான்கு வேதங்கள் :

ரிக், யசூர், சாம , அதர்வண வேதங்கள்.

இந்த வேதங்கள் இயற்கை வழிபாடுகள் ,
உருவம் சார்ந்த வழிபாடுகள் என்று இருந்தது.

இன்றும் நம்மில் பலருக்கும் தெரிந்த மிகவும் பரிச்சயமான பில்லி, சூனியம் போன்றவை அதர்வண வேத வழிபாட்டுமுறைகள்.

மலையாள தேசத்து அந்தணர்களில் ஒரு சாரர் அதர்வண வேதங்கள் மீது பற்று கொண்டோர்.
இதற்கு என்று வழிபாட்டு தலங்களும் உள்ளன.

நம் மக்களுக்கு மிகவும் அவசியமான
ஒன்று என்றால் அது "திருக்குறள்", "திருவாசகம்" , "ஆத்திச்சூடி" .

மற்ற வேதங்கள் இயற்கை வழிபாடுகளை , உருவ வழிபாடுகளை முன் வைக்கின்றது. 

ஒரு அடி ஆத்திச்சூடி, இரு அடி குறள் தரும் மேன்மையான உன்னதமான வாழ்வியலை சொல்லும் நூல் உலகில் வேறு இல்லை, வேறு மதங்களிலும் இல்லை.




தொடரும்..... பகுதி-3



No comments:

Post a Comment