Thursday, August 23, 2018

இன்டெல்லின் புதிய சாதனை, 'CELL'Solid State Drive (SSD) -DC P4500(32TB)

உலகிலேயே மிக அடர்த்தியான, எஸ்.எஸ்.டி எனப்படும், 'சாலிட் ஸ்டேட் டிரைவ்' ஒன்றை இன்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச் சிறிய அளவுள்ள இந்த டிரைவ், 32 டெரா பைட் அளவு தகவல் கொள்திறன் கொண்டது.
பெரும் நிறுவனங்கள் தகவல் சேகரித்து வைக்கும், 'டேட்டா சென்டர்'கள் முதல் இணையத்திற்கு பாலமாக இருக்கும் பிரமாண்ட, 'சர்வர்கள்' வரை அடியோடு மாறப்போகின்றன.
இந்த மையங்களில், சர்வர்கள் ஏராளமான இடத்தை அடைத்தபடி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சி, அதிக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருப்பவை. இந்த வெப்பத்தை தணிக்கவே நிறைய செலவு செய்யவேண்டும்.
இதற்கெல்லாம் வேலையே இல்லாமல் செய்யவிருக்கிறது இன்டெல்லின் புதிய, சில்லு.
எஸ்.எஸ்.டி.டி.சி., பி4500 என்ற முரட்டுப் பெயர் கொண்ட இந்த சில்லுவின் நீளம், 30.5 செ.மி., அகலம், 3.8 செ.மீ. தடிமன் வெறும், 0.8 செ.மீ.,தான். பார்ப்பதற்கு இரும்பு ஸ்கேல் போலத் தெரிகிறது. ஆனால், வழக்கமான ஒரு சர்வரில் சர்க்யூட்டை பொருத்தும் 'ஸ்லாட்'டில், இன்டெல்லின் புதிய, எஸ்.எஸ்.டி., சில்லுகளில், 32 சில்லுகளை மாட்டிவிட முடியும். அதாவது மொத்தம், 1 பெட்டா பைட் தகவல்களை அத்துணுாண்டு இடத்தில் அடக்கிவிட முடியும். இந்த சில்லுகள் அதிக வெப்பத்தை கக்காது. எனவே சாதாரண ஹார்டு டிஸ்கிற்கு தேவையான காற்றோட்டமே போதும் என்கிறது இன்டெல்.

Intel has launched a new long ruler shaped Solid State Drive (SSD) with a storage capacity of 32TB named the Intel DC P4500. The company says this new SSD offering will be able to replace the older mechanical drives that heat up a lot, produce humming and buzzing sounds while at the same time requiring expensive temperature units designed specifically for the storage of such drives. This new 32TB SSD is almost the size of a 12-inch ruler and requires only 50 per cent of the amount of airflow compared to traditional SSD drives to keep it cool thus reducing management costs.
The Intel DC P4500 SSD comes with 32TB of storage, which the company states is triple the amount of storage required to store the entire printed collection of the US Library of Congress.
To attain such a huge amount of storage in an SSD, Intel has built the dense drive upon their own 3D NAND technology, with the help of which the company was able to stack memory cells on top of each other in multiple extremely thin layers taking the total number memory cell layers inside the Intel DC P4500 SSD to 64 layers instead of just one.
By: Tech Desk | New Delhi | Published: August 11, 2018 2:57:40 pm
Intel, Intel 32TB SSD, 32TB SSD, Intel cloud storage, Intel SSD, High storage SSD, Big SSD, Intel SSD 32TB, Microsoft, Tencent, IBM
X
This new 32TB SSD is almost the size of a 12-inch ruler and requires only 50 per cent of the amount of airflow.
Intel has launched a new long ruler shaped Solid State Drive (SSD) with a storage capacity of 32TB named the Intel DC P4500. The company says this new SSD offering will be able to replace the older mechanical drives that heat up a lot, produce humming and buzzing sounds while at the same time requiring expensive temperature units designed specifically for the storage of such drives. This new 32TB SSD is almost the size of a 12-inch ruler and requires only 50 per cent of the amount of airflow compared to traditional SSD drives to keep it cool thus reducing management costs.
The Intel DC P4500 SSD comes with 32TB of storage, which the company states is triple the amount of storage required to store the entire printed collection of the US Library of Congress.
To attain such a huge amount of storage in an SSD, Intel has built the dense drive upon their own 3D NAND technology, with the help of which the company was able to stack memory cells on top of each other in multiple extremely thin layers taking the total number memory cell layers inside the Intel DC P4500 SSD to 64 layers instead of just one.
The key features of the Intel DC P4500 SSD include a lower amount of airflow required to keep cool, it requires one-tenth of the power and one-twentieth of the space compared to traditional hard disks.
Intel during the launch announcement stated that the new DC P4500 SSD is already being used by major tech companies like IBMMicrosoft, and Tencent for their cloud data centre operations.

'ஹைபர்சானிக்' விமானம்

'ஹைபர்சானிக்' விமானம்:


உலகின் முன்னணி விமான நிறுவனம் போயிங். தலைமையகம் வாஷிங்டன். 
2016 கணக்கின் படி, 750 பயணிகள் விமானங்கள், 180 ராணுவ விமானங்கள், 5 செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் 'ஹைபர்சானிக்' பயணிகள் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 

'ஹைபர்சானிக்' என்பது ஒலியின்(SOUND) வேகத்தை விட, ஐந்து மடங்கு அதிகம்.


வானியல் வேகத்தை 'மாக்' எண் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர்.
 'மாக் 1' என்பது ஒலியின் சராசரி வேகத்தை குறிக்கிறது. அதாவது ஒலியின் வேகம் என்பது, மணிக்கு 1,235 கி.மீ./HOUR இதனை 'டிரான்ஸ்சானிக்' என குறிப்பிடுவர். 

அதேபோல 'மாக்' எண் 1 - 5 வரை உள்ள வேகத்தை, 'சூப்பர்சானிக்' என குறிப்பிடுகின்றனர். இது மணிக்கு 1,470 - 6,126 கி.மீ./HOUR, வேகம் வரை செல்லும்.

'மாக்' 5 - 10 வரை உள்ள வேகத்தை 'ஹைபர்சானிக்' எனப்படுகிறது. இது மணிக்கு 6,125 - 12,251 கி.மீ./HOUR, வேகத்தில் செல்லும். 

இதற்கு மேல் 'ஹை ஹைபர்சானிக்', 'ரீ என்ட்ரி' போன்றவை உள்ளன. 

'மாக்' 1ஐ விட குறைவான வேகத்தை 'சப்சானிக்' என அழைக்கின்றனர். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 980 கி.மீ/HOUR. இந்த வேகத்தில் தான் தற்போதைய பயணிகள் விமானங்கள் பயணிக்கின்றன.

Monday, August 20, 2018

தென்மேற்கு பருவமழையில் "கேரளம்"



இந்த ஆகஸ்ட் மாதத்தில் நமது அண்டை மாநிலமான கேரளம் தென்மேற்கு பருவமழையின் காரணமாக மிகவும்  பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

எப்பொழுதும் கேரளம் ஒரு வசீகரமான ,  இயற்கை அழகு கொண்ட இதமான தட்பவெப்பநிலை கொண்ட மாநிலம் . இந்த அழகு தேசம் இன்று இருக்கும் அவல நிலையை கண்டால் உள்ளம் பதைக்கிறது .
ஆனால் அங்கு உள்ள அரசியல் வாதிகளை கண்டால் கோபம் தான் வருகிறது.

இந்த மழையில் மக்கள் தாளா துயரத்தில் உள்ள நிலையில் பெரியார் அணையின் நீர் சேமிப்பு தொடர்பாக  வழக்கு தொடுக்கப்பட்டு , அதுவும் ஏதோ
உரிமை போராட்டம் போல ஒரு உருவகம் செய்து தமிழர்களை என்றும் எதிரிகள் போலவே சித்தரித்து அரசியல் செய்வது வேதனையை  தான் தருகின்றது.

சரி , (1) பெரியார் அணையில் உண்மையில் நடப்பது என்ன?.  (2) ஏன் அவசர வழக்கு தொடுக்க பட்டது ?  ( 3) முகாந்திரம் உள்ளதா?


    தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளம் நல்ல மழை பொலிவை பெற்ற பொழுது தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரளா மலை பகுதிகளிலும் பெய்த மழையால் பெரியார் அணை நிரம்பி வந்தது . அணையின் உயரம் 152 அடி. நீர் தேக்க அனுமதி 142.அடி. இந்த 142 அடி நிரம்பிய பிறகு வரும் நீர் கேரளம் பகுதி வழியாக இடுக்கி அணைக்கு கொண்டுசெல்லப்படும் .
தற்பொழுது ஏற்கனவே இடுக்கி நிரம்பிய நிலையில் பெரியார் அணையும் நிரம்பி விட்டது. கேரள முதல்வர் நீர் தேக்கும் 142 அடியை 139 அடிக்கு குறைக்க வேண்டும் என்கிறார் . பொதுநல வழக்கு தொடர்கிறார்கள் .

ஏற்கனவே  உள்ள மழை நீர் வடிய வழி இல்லாதா நிலையில்,  மேற்கொண்டு அணையில் குறைக்கும்(திறக்கும்)  3 அடிக்கான (142-139=3) தண்ணீர் கேரளம் பகுதிக்கே திறந்து விட்ட கேரளா பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கேரளா முதல்வரும் வழக்கை விசாரித்த நீதிபதியும் எதை உத்தேசித்து இந்த வேலையை செய்தார்கள் என்று என்னும் பொழுது , கேரளா மக்கள் தான் கண் முன் வருகின்றார்கள் .  அனைத்து உதவிகளும் தமிழர்கள் தானாக முன்வந்து எங்களின் அண்டை மாநில மக்கள் என்கின்ற எண்ணம் கொண்டு தாராளமாக வாரி வாரி தந்தாலும் அங்குள்ள குள்ளநரிகள் தவறான தகவல்களை பரப்பியதோடு இன்றி இன்னும் அரசியல் செய்யும் மனப்பாங்கு கேவலமான ஒரு செயல் .

உண்மையில் மக்களை காக்க எண்ணி இருந்தால் 3 அடி தண்ணீர் அதிகமாக , அதாவது 145அடிவரை தண்ணீரை சேமித்து கேரளம் பகுதிக்கு நீரை திறக்காமல் தாமதப்படுத்த செய்து அதுவரை தமிழகப்பகுதிக்கு கூடுதல் நீர் கொடுத்து மக்களையும் காத்திருக்கலாம் . (அண்டை மாநில நலனிலும் அக்கறை கொண்டு இருக்கலாம்).சொந்த மாநில மக்களும் காப்பற்ற பட நல்ல வாய்ப்பும் , கூடுதல் கால அவகாசம் கிடைத்திருக்கும்.

நீங்கள் எப்படி இருந்தாலும் தமிழன் என்றுமே தமிழன் தான். இல்லாதோருக்கு கொடுப்பது என்றும் தமிழனின் உயர்ந்த பண்பு. அதை எந்த நிலையிலும் தமிழன் இழக்கமாட்டான் .


நீரில் அரசியல் நீ செய்தாய் .
நீரில் உதவிகள் நாங்கள் செய்கின்றோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே
"நீரில் அரசியல் நீ செய்தாய் "
என்று எங்கள் நிலையில் நாங்கள் கேட்டோம்....


அவ்வை பாட்டி ஓதிய "ஆத்தி சூடி " மட்டும் தான் என்றும் சரியானது.

அறம் செய்ய விரும்பு !...








துரோகங்கள் என்றாவது ஒருநாள் தண்டிக்க படும் .....




என்றும் ..
விவசாயி






முன்னோடிகள் மறைவு திரு. வாஜிபாய்..- திரு. கருணாநிதி



இந்த மாதம் ஆகஸ்ட் 7 ம் நாள் தமிழகத்தின்  மூத்த அரசியல்வாதியும் , தமிழகத்தின் முன்னால் முதல்வருமான திரு. கருணாநிதி.மு.க. அவர்கள் இந்த மண்ணுலகில் தன் பூத உடலை விட்டு , தமிழக அரசியல் மற்றும் இந்த இந்திய நாட்டின் அரசியலிலும் ஆத்மாவையும் விட்டுவிட்டு சென்றார்.
(மார்ச் 03,1924) - (ஆகஸ்ட் 07,2018 )
இந்த மாதம் ஆகஸ்ட் 16 ம் நாள் இந்தியாவின்   மூத்த அரசியல்வாதியும் , இந்தியாவின் முன்னால் பிரதமர்   திரு. அடல் பிஹாரி வாஜிபாய்  அவர்கள் இந்த மண்ணுலகில் தன் பூத உடலை விட்டு ,  இந்த இந்திய நாட்டின் அரசியலிலும் , வளர்ச்சியிலும் தன் ஆத்மாவையும்  விட்டு விட்டு சென்றார்.
(டிசம்பர் 25,1924) - (ஆகஸ்ட் 16,2018 )

இரு பெரும் அரசியல் முன்னோடிகள் மறைவு வருத்தத்தை தந்தாலும் , இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் , என் மனதில் உள்ள எண்ணத்தின் படி ,
திரு. அடல் பிஹாரி வாஜிபாய்  அவர்கள் உயர்ந்தவர்.

" இந்தியா எனும் நாடு உலக நாடுகள் ஏற்று கொண்டாலும் இல்லை என்றாலும் அணு ஆயுதம் கொண்ட ஒரு வளரும் வல்லரசு நாடு. நீங்கள் போட்ட தடைகளால் நாங்கள் துவண்டு விடவில்லை. இன்னும் ஒரு படி முன்னேறி அணு பிளவு  / அணு இணைப்பு இரு முறைகளிலும் தன்னிறைவு பெற்று விட்டோம். உங்களின் தடைகளை நாங்கள் வென்றுவிட்டோம். இந்தியா முதலில் அணுகுண்டை பயன் படுத்தாது" என்கின்ற ஒரு பேச்சு ஓவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் உயர்ந்த வரிகளின் சொந்தக்காரர் .

ஊழல் கரை படியாத நிலையில் , உயர்ந்து நிற்கின்றார்  திரு. அடல் பிஹாரி வாஜிபாய்  அவர்கள்.