Tuesday, June 13, 2017

பிச்சிவாக்கம் பட்டமுடீஸ்வரர்

பிச்சிவாக்கம் பட்டமுடீஸ்வரர் கோவில் பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்கின்றேன்.
பட்டம் பதவிகளை வாரி கொடுக்கும் சிவன்கோவில் பிச்சிவாக்கம் எனும் ஊரில் உள்ளது.1200 வருடங்கள் முன்பு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
ஐப்பசி பௌர்ணமி அன்னாப்பிசேகம் விசேசம். பிரதோஷம் நாள் அன்று சிறப்பு ஆராதனைகள் பூஜைகள் நடைபெறும்.
கேட்கும் வரம் வழங்கும் சிவனை தரிசிக்க செல்லுபவர்கள் பின்வரும் தகவல்களை தெரிந்து கொண்டு செல்வது தரிசனம் செய்ய உதவும்.
கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் , வேலூர் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது.தக்கோலத்தில் இருந்து 5 கி.மீ. உம், பேரம்பாக்கத்தில் இருந்து 3 கி.மீ. இல் உள்ளது. தக்கோலம் அரக்கோணம் அருகில் உள்ளது.அருமையான கிராமம்.
கோயிலில் பூஜைக்கு என்று பொதுவான நேரம் இல்லை.
அங்கு கோயில் நடை மூடி இருந்தால் அருகிலுள்ள வீட்டில்தான் சாவி இருக்கின்றது. சொன்னால் உதவி கிடைக்கும். தரிசனமும் கிடைக்கும்.
சென்னையில் இருந்து தி.நகர் , பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து பேரம்பாக்கம் செல்ல பேருந்து உள்ளது.
அங்கிருந்து அரக்கோணம் , தக்கோலம் , காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் செல்லும்.
நேரிடையாக செல்ல பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்து 91 உதவும்.
பிரதான சாலையில் இருந்து சுமார் 1 கீ.மீ நடந்து சென்றால்தான் கோவிலை அடையாளம். குறித்த நேரம் மட்டும் பேருந்து வசதி உள்ளது.




இந்த பகுதியில் “நெஞ்சுவட்ட மரம்” ஓவ்வொரு வீட்டிலும் உள்ளது.தக்கோலத்திலும் ஓவ்வொரு வீட்டிலும் உள்ளது. கூட முருங்கை மரமும் உள்ளது.



ஊரின் இயற்கை அழகையும், சுத்தமான காற்றையும் காண இங்கு செல்வது அவசியம்.












தக்கோலம் சரித்திரம் நிறைந்த ஒரு இடம். சோழர்கள் காலத்தில் இங்கு ஒரு மிகப்பெரிய போர் நடந்த இடம்.
“யானை மேல் துஞ்சிய வீரர்” என்று போற்றப்படும் சோழ பரம்பரை வீரர், வீர சுவர்க்கம் அடைந்த போர் நடந்த இடம். ஏழு சிவன் கோயில்கள் கொண்டு உள்ள ஊர் இது.

குரு பரிகாரத்தலம் , பெரிய கோயில் என்றும் அறியப்பட்ட “ஜலநாதிஸ்வரர்” கோயில் கொண்ட இடம்.
கல்வெட்டுக்கள் பாதுக்காப்படாமலும் , தலவரலாறு இன்றியும் உள்ள இந்த கோயில் சுமார் 2௦௦௦ வருடம் பழமையானது.
ஆனால் அரசியல்வாதிகள் கல்வெட்டுக்கள் பாதுகாப்பு-உடன் உள்ளது வேதனை.
அருமையான அமைதியான சிவன், முருகன் மற்றும் அம்மையார் உடன் அருள் தரும் தலம்.
தலத்தின் தலைவர் ஆறு மாதம் வெண்ணிறமும், ஆறு மாதம் செந்நிறமும் கொண்டு காணப்படுவார்.






கங்காதிஸ்வரர், பாலிஸ்வரர்,அகதிஸ்வரர், தேனிஸ்வரர், சோமனாதிஸ்வரர் என்று அழகாய் அழைக்க படும் தளங்கள் நடந்து சென்று காணும் மட்டும் உள்ளது.இங்கு மாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்படும்.
கோயில் சிற்பங்கள் சொல்லும் கதைகள் எண்ணற்றவை. சிவனை வேண்டும் சிற்பங்கள், சீதா தேவியை தேடிய,கண்ட அனுமார் காட்சி குதிரையை அன்புடன் தழுவிய மங்கையின் கணிவு என்று எண்ணற்ற சிற்பங்கள்.








“தொண்டை சோழ மண்டலம்” என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சில உள்ளது.


ஊருக்கு அருகில் ஓர் ஆரு உள்ளது. அது காவேரிப்பாக்கம் ஏரியின் வடிகால் நீர் செல்ல வெட்டப்பட்டது என்று ஊரார் சொல்ல கேள்வி.இன்று சுமார் 60 மீட்டர் தூரம் அகலம் மட்டும்தான் உள்ளது. இது முன்பு சோழர்களாலும் பின்பு பாண்டியர்களாலும் விரிவு செய்யப்பட்டு , மீண்டும் சோழர்களால் புனரமைப்பு செய்யப்பட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


 






என்றும் உங்கள்

விவசாயி

No comments:

Post a Comment