Thursday, August 8, 2013

பனை மலை கோயிலுக்கும் செல்லலாம்...

செஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் உள்ளது "பனைமலை". வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே, "வாங்க, வாங்க, இங்கே தான் இருக்கேன் " என்று சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலேயே கம்பீரமாக மலையின் மீது இருந்த இந்த 1300 வருட பொக்கிஷம் எங்களை வரவேற்பதை போன்றிருந்தது. செங்குத்தான மலை, மலை ஏறுவதற்கு பாறைகளையே படிகளாக செதுக்கி இருகிறார்கள். மேலே சென்றதும் அவர் சொன்னது போல், இந்த இடம் ஒரு சொர்க்கம் தான், மலை மீது நின்று பார்த்தால், கோயிலின் முன் புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருத நிலம், அதற்கு நடுவே சாலை, பின்புறம் மலைகள், நடுவிலே ஏரி, ஆனால் தவறான காலத்தில் வந்து விட்டோம், அறுவடை முடிந்த வேலை, மழை இல்லாமல் வறண்ட ஏரி, சுட்டெரிக்கும் சூரியன், இந்த இடத்திற்கு செல்ல சரியான காலம், நவம்பர், டிசம்பர்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவரும், மாமல்லபுரம் சிற்பங்களை கொடுத்தவருமான "ராஜசிம்ம பல்லவனால்" கட்டப்பட்டது இந்த கோயில், கைலாசநாதர் கோயிலை போலவே எல்லா இடங்களிலும் ஓவியங்களை தீட்டி இருக்கிறார்கள், அதற்கான சுவடுகள் ஆங்காங்கே தெரிகிறது, ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு ஓவியம் இன்றும் உயிரோடு உள்ளது. காண கண்கோடி வேண்டும், என்ன வளைவு, என்ன நெளிவு, என்ன நிறங்கள்!! ஆஹா பார்க்கும் போது மனிதர்கள் அப்போது எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருகிறார்கள் என்பதை காட்டுகிறது.

கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன சன்னதியில் ஒரு சுரங்கம் உள்ளது, உள்ளே சென்று பார்த்தேன் சுமார் ஆறடி உயரத்திற்கு கீழே இறங்கி உள்ளே செல்ல வேண்டும், சென்றதும் உள்ளே ஒரு சிறிய அறை, இருட்டாக இருந்தது, விஷ ஜந்துக்கள் இருந்தாலும் தெரியாது. வாயில் கைபேசியை கடித்துக்கொண்டு அதன் ஒளியால் மட்டுமே காண முடிந்தது.

அங்கிருந்து வெளியில் வந்து சுற்றி பார்க்கும்போதுதான் இன்னொன்றையும் பார்க்க நேர்ந்தது. அந்த கோவிலுக்கு நீர்வளம் சேர்க்க, அங்குள்ள பாறைகளை குடைந்து குளமாக மாற்றியிருக்கிறார்கள். குளம், ஓவியம், சிற்பம், கட்டிட அழகு, அலுக்காத இயற்கை வளம் போன்றவற்றை கண்டு, இறங்க மனமில்லாமல் மலையை விட்டு இறங்கினோம்.

அனைவரும் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்று பாருங்கள், உங்களுடைய பயணத்தை வெயில் முடிந்ததும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
https://www.facebook.com/media/set/?set=a.508117225918269.1073741827.100001599881709&type=1

Photo: இரு வாரங்களுக்கு முன்பு தேவனூரில் ஐம்பொன் சிலைகளை காணச் சென்ற போது, தேவனூர் கோயில் பணிகள் தொடங்க காரணமாக இருந்த, இயக்குனர் திரு.பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் என்னுடைய நண்பர் "திரு.தமிழ் செல்வனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
 உங்கள் மாவட்டத்தில் ராஜ ராஜன் கட்டிய கல்லூரி ஒன்று உள்ளது அதனுடன் சேர்த்து இன்னும்  சில புராதானமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை காண வேண்டும் உதவுவீர்களா? என்று கேட்டதும், துளியும் யோசிக்காமல் மனிதர் அடுத்த வாரம் வாருங்கள் அழைத்துச் செல்கிறேன் என்றார்  அப்போது அவர் " பனை மலை " கோயிலுக்கும் செல்லலாம் எனக்கு மிகவும் பிடித்த இடம் என்று கூறினார், ஏற்கனவே இந்த கோயிலின் சிறப்புகளை ஓரளவிற்கு இணையங்களில் படித்திருக்கிறேன், மேலும் இயக்குனர்கள் ரசிக்கும் இடம் என்றால் நிச்சயம் அழகானதாகவே இருக்கும் என்று புறப்பட்டோம் என்னுடன் நண்பர் ரமேஷும் உடன்வந்திருந்தார்.
 
செஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் உள்ளது "பனைமலை". வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே, "வாங்க, வாங்க, இங்கே தான் இருக்கேன் " என்று சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலேயே கம்பீரமாக மலையின் மீது இருந்த இந்த 1300 வருட பொக்கிஷம் எங்களை வரவேற்பதை போன்றிருந்தது. செங்குத்தான மலை, மலை ஏறுவதற்கு பாறைகளையே படிகளாக செதுக்கி இருகிறார்கள். மேலே சென்றதும் அவர் சொன்னது போல், இந்த இடம் ஒரு சொர்க்கம் தான், மலை மீது நின்று பார்த்தால், கோயிலின் முன் புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருத நிலம், அதற்கு நடுவே சாலை, பின்புறம் மலைகள், நடுவிலே ஏரி, ஆனால் தவறான காலத்தில் வந்து விட்டோம், அறுவடை முடிந்த வேலை, மழை இல்லாமல் வறண்ட ஏரி, சுட்டெரிக்கும் சூரியன், இந்த இடத்திற்கு செல்ல சரியான காலம், நவம்பர், டிசம்பர்.
 
காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவரும், மாமல்லபுரம் சிற்பங்களை கொடுத்தவருமான "ராஜசிம்ம பல்லவனால்" கட்டப்பட்டது இந்த கோயில், கைலாசநாதர் கோயிலை போலவே எல்லா இடங்களிலும் ஓவியங்களை தீட்டி இருக்கிறார்கள், அதற்கான சுவடுகள் ஆங்காங்கே தெரிகிறது, ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு ஓவியம் இன்றும் உயிரோடு உள்ளது. காண கண்கோடி வேண்டும், என்ன வளைவு, என்ன நெளிவு, என்ன நிறங்கள்!! ஆஹா பார்க்கும் போது மனிதர்கள் அப்போது எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருகிறார்கள் என்பதை காட்டுகிறது.
 
கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன சன்னதியில் ஒரு சுரங்கம் உள்ளது, உள்ளே சென்று பார்த்தேன் சுமார் ஆறடி உயரத்திற்கு கீழே இறங்கி உள்ளே செல்ல வேண்டும், சென்றதும் உள்ளே ஒரு சிறிய அறை, இருட்டாக இருந்தது, விஷ  ஜந்துக்கள் இருந்தாலும் தெரியாது. வாயில் கைபேசியை கடித்துக்கொண்டு அதன் ஒளியால் மட்டுமே காண முடிந்தது.

அங்கிருந்து வெளியில் வந்து சுற்றி பார்க்கும்போதுதான் இன்னொன்றையும் பார்க்க நேர்ந்தது. அந்த கோவிலுக்கு நீர்வளம் சேர்க்க, அங்குள்ள பாறைகளை குடைந்து குளமாக மாற்றியிருக்கிறார்கள். குளம், ஓவியம், சிற்பம், கட்டிட அழகு,  அலுக்காத இயற்கை வளம் போன்றவற்றை கண்டு, இறங்க மனமில்லாமல் மலையை விட்டு இறங்கினோம்.
 
அனைவரும் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்று பாருங்கள், உங்களுடைய பயணத்தை வெயில் முடிந்ததும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

https://www.facebook.com/media/set/?set=a.508117225918269.1073741827.100001599881709&type=1                                 
     
நன்றிகள்:- சசிதரன்

No comments:

Post a Comment