உடையார் பயணம்.
திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் (வெள்ளை பிள்ளையார்) கோயிலில் க்ஷேத்ரபாலர்
சன்னிதி ஒன்று "இருந்தது". இடிந்து வெறும் மண்மேடாக நெருஞ்சி முட்கள் சூழ
கிடந்த இந்த இடத்தில் திரு. இரா.கலைக்கோவன், நளினி போன்ற கல்வெட்டு
ஆய்வாளர்கள் அரும்பாடு பட்டு மிகுந்த சிரமத்துடன், இந்த சன்னதியில் இருந்த
கல்வெட்டுகளை படி எடுத்தனர். இந்த க்ஷேத்ரபாலர் சன்னிதி, கோயில் வளாகத்தின்
தென்கிழக்கு மூலையில் அப்போது தனிக்கோயிலாகவே விளங்கியுள்ளது. இக்
கோயிலில் இருந்த கல்வெட்டுகளை கூறும் தகவலை ஆய்ந்தால் பிரமிப்பூட்டும்
தகவல்கள் கிடைகின்றன, அதில் முக்கியமானது
"ராஜேந்திர சோழன் தனது
தந்தையின் முதலாண்டு நினைவாக இந்த சன்னதியில் தான் எள் மலை புகுந்துள்ளார்.
அதாவது எள் கொண்டு நீத்தார் கடன் செய்ததைக் குறிப்பிடுகிறது.மேலும்
ராஜேந்திர சோழனின் மனைவிகளில் ஒருவரான வானவன் மாதேவி இந்த கோயிலுக்கென ஒரு
பொற்ப் பூவை அளித்துள்ளார்.அவரின் இன்னொரு மனைவியான கிழாநடிகள் பொன்னில்
செய்த 25 நெருஞ்சிப் பூக்களை காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த கோயிலை
கற்றளியாக எழுப்பிய ராஜ ராஜனின் மனைவியான உலகமாதேவியார்
அறுபது பொற்பூக்களைப் காணிக்கையாக கொடுத்து தொழுதுள்ளார்.
உலகமாதேவியாரின் பணிமகள் வேளாண் இலங்கவிச்சாதிரி இரண்டு மஞ்சாடிக் பொன்
அளித்துள்ளார்.
மேலும் முதலாம் ராஜேந்திரரின் மூன்றாம்
ஆட்சியாண்டில் உலகமாதேவியார் 144 கழஞ்சுப் பொன்னில் செய்யப்பட்ட 147
பொற்பூக்களைப் ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்!.அதே போல் நகை அன்பளிப்பாக
ஷேத்திர பாலருக்கு தகட்டுத் திருமாலை, தகட்டுத் தோள்வளை, தகட்டுப் பாத
சாயலம் ஆகியவற்றை போனால் சாற்றியுள்ளனர்.
தட்சிணாய சங்கராந்தி
அன்று ராஜேந்திர சோழன் 46 கழஞ்சப் பொன்னால் செய்யப்பட்ட 1116 பொற்பூக்களால்
ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்! ராஜேந்திர சோழரின் அன்னை திருபுவன
மாதேவி 20 பொற்பூக்களைப் இட்டு வணங்கியுளார்.அதோடு பொன்னால் செய்யப்பட்ட
உதரபந்தமும், தட்டும் வழங்கியுள்ளார். ராஜ ராஜ சோழன் இரண்டு சரணங்களை
ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார். (தந்தையும், மகனும் சேர்ந்து மூன்று
ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர்). இது அவர் இறப்பதற்கு முன் வழங்கப்பட்ட
கொடை.
இது போக உலகமாதேவியார் ஷேத்திர பாலருக்கு வெள்ளி மானவட்டில்
ஒன்றையும் அளித்துள்ளார்.அரசு அலுவலரான பெருந்தனத்துத் தந்தி வெள்ளியிலான
பாத்திரம் ஒன்றும், வெண்கலத் தளிகைகள் இரண்டும், வெண்கலத்தாலான கவசமும்,
கரகமுடியும், இலைத் தட்டு ஒன்றும் வழங்கி வணங்கியுளார்.மற்றொரு பேரையன்
என்ற அலுவலர் பொன் மோதிரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அரசர்கள்,அரசியர்,அலுவலர்கள் என அனைவரும் கொடுத்த கொடிகளை உரியவாறு பதிவு
செய்ய இதற்கென ஆட்கள் நியமித்துள்ளார் உலகமாதேவியார். இந்த தகவல்கள் மூலம்
இந்த ஷேத்திர பாலர் சோழ அரசர்களால் எவ்வளவு நேசித்து வணங்கபட்டுள்ளார்
என்பதற்கு இந்த கல்வெட்டுகளே சான்று.
ஒரு காலத்தில் பொற்பூக்களால்
சூழப்பட்ட ஷேத்திர பாலரின் சன்னதி தற்போது நெருஞ்சிப் பூக்களால்
சூழப்பட்டு, கோயில் இடிந்து மண் மேடாக கிடந்ததை இப்போது தான் சீர்
செய்துள்ளனர், இங்கிருந்து சில கற்களை வேறு கட்டுமானப் பணிகளுக்கு தூக்கிச்
சென்று விட்டதால், தற்போது இந்த இடம் படத்தில் உள்ளதை போன்று தான்
பரிதாபமாக காட்சியளிகின்றது. ஷேத்திர பாலராவது இருகிறாரன்னு கேக்கறீங்களா?
அவர தூக்கி கொண்டு போய் தஞ்சாவூர் அருங்காட்சியத்துல காட்சிப் பொருளா
வெச்சி ரொம்ப வருஷம் ஆகுது.
கல்வெட்டு தகவல்கள் : வரலாறு.காம்.
நன்றிகள் : சசிதரன்
உடையார் பயணம்.
திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் (வெள்ளை பிள்ளையார்) கோயிலில் க்ஷேத்ரபாலர் சன்னிதி ஒன்று "இருந்தது". இடிந்து வெறும் மண்மேடாக நெருஞ்சி முட்கள் சூழ கிடந்த இந்த இடத்தில் திரு. இரா.கலைக்கோவன், நளினி போன்ற கல்வெட்டு ஆய்வாளர்கள் அரும்பாடு பட்டு மிகுந்த சிரமத்துடன், இந்த சன்னதியில் இருந்த கல்வெட்டுகளை படி எடுத்தனர். இந்த க்ஷேத்ரபாலர் சன்னிதி, கோயில் வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் அப்போது தனிக்கோயிலாகவே விளங்கியுள்ளது. இக் கோயிலில் இருந்த கல்வெட்டுகளை கூறும் தகவலை ஆய்ந்தால் பிரமிப்பூட்டும் தகவல்கள் கிடைகின்றன, அதில் முக்கியமானது
"ராஜேந்திர சோழன் தனது தந்தையின் முதலாண்டு நினைவாக இந்த சன்னதியில் தான் எள் மலை புகுந்துள்ளார். அதாவது எள் கொண்டு நீத்தார் கடன் செய்ததைக் குறிப்பிடுகிறது.மேலும் ராஜேந்திர சோழனின் மனைவிகளில் ஒருவரான வானவன் மாதேவி இந்த கோயிலுக்கென ஒரு பொற்ப் பூவை அளித்துள்ளார்.அவரின் இன்னொரு மனைவியான கிழாநடிகள் பொன்னில் செய்த 25 நெருஞ்சிப் பூக்களை காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த கோயிலை கற்றளியாக எழுப்பிய ராஜ ராஜனின் மனைவியான உலகமாதேவியார் அறுபது பொற்பூக்களைப் காணிக்கையாக கொடுத்து தொழுதுள்ளார். உலகமாதேவியாரின் பணிமகள் வேளாண் இலங்கவிச்சாதிரி இரண்டு மஞ்சாடிக் பொன் அளித்துள்ளார்.
மேலும் முதலாம் ராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் உலகமாதேவியார் 144 கழஞ்சுப் பொன்னில் செய்யப்பட்ட 147 பொற்பூக்களைப் ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்!.அதே போல் நகை அன்பளிப்பாக ஷேத்திர பாலருக்கு தகட்டுத் திருமாலை, தகட்டுத் தோள்வளை, தகட்டுப் பாத சாயலம் ஆகியவற்றை போனால் சாற்றியுள்ளனர்.
தட்சிணாய சங்கராந்தி அன்று ராஜேந்திர சோழன் 46 கழஞ்சப் பொன்னால் செய்யப்பட்ட 1116 பொற்பூக்களால் ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்! ராஜேந்திர சோழரின் அன்னை திருபுவன மாதேவி 20 பொற்பூக்களைப் இட்டு வணங்கியுளார்.அதோடு பொன்னால் செய்யப்பட்ட உதரபந்தமும், தட்டும் வழங்கியுள்ளார். ராஜ ராஜ சோழன் இரண்டு சரணங்களை ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார். (தந்தையும், மகனும் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர்). இது அவர் இறப்பதற்கு முன் வழங்கப்பட்ட கொடை.
இது போக உலகமாதேவியார் ஷேத்திர பாலருக்கு வெள்ளி மானவட்டில் ஒன்றையும் அளித்துள்ளார்.அரசு அலுவலரான பெருந்தனத்துத் தந்தி வெள்ளியிலான பாத்திரம் ஒன்றும், வெண்கலத் தளிகைகள் இரண்டும், வெண்கலத்தாலான கவசமும், கரகமுடியும், இலைத் தட்டு ஒன்றும் வழங்கி வணங்கியுளார்.மற்றொரு பேரையன் என்ற அலுவலர் பொன் மோதிரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அரசர்கள்,அரசியர்,அலுவலர்கள் என அனைவரும் கொடுத்த கொடிகளை உரியவாறு பதிவு செய்ய இதற்கென ஆட்கள் நியமித்துள்ளார் உலகமாதேவியார். இந்த தகவல்கள் மூலம் இந்த ஷேத்திர பாலர் சோழ அரசர்களால் எவ்வளவு நேசித்து வணங்கபட்டுள்ளார் என்பதற்கு இந்த கல்வெட்டுகளே சான்று.
ஒரு காலத்தில் பொற்பூக்களால் சூழப்பட்ட ஷேத்திர பாலரின் சன்னதி தற்போது நெருஞ்சிப் பூக்களால் சூழப்பட்டு, கோயில் இடிந்து மண் மேடாக கிடந்ததை இப்போது தான் சீர் செய்துள்ளனர், இங்கிருந்து சில கற்களை வேறு கட்டுமானப் பணிகளுக்கு தூக்கிச் சென்று விட்டதால், தற்போது இந்த இடம் படத்தில் உள்ளதை போன்று தான் பரிதாபமாக காட்சியளிகின்றது. ஷேத்திர பாலராவது இருகிறாரன்னு கேக்கறீங்களா? அவர தூக்கி கொண்டு போய் தஞ்சாவூர் அருங்காட்சியத்துல காட்சிப் பொருளா வெச்சி ரொம்ப வருஷம் ஆகுது.

No comments:
Post a Comment