Tuesday, May 6, 2025

The Kashmir Only to India

 I read this book recently and i suggest to every one to read this book, because we need to understand the Indian Army and history. 

We need to understand the Kashmir Issue and Indian Army supports while on freedom in 1947 and the Geography , peoples thinking and their activity, Politics and next what happened and what is the activities.

Book Name : The Kashmir Only to India.

Author : Caption Mr. S.P.Kutty 

Language : Tamil 


https://drive.google.com/file/d/1KwbRdr3zlaWoTkwdbNcbIIr49lUO8m2Z/view?usp=sharing

Saturday, June 11, 2022

தமிழ்நாடு மின் வாரிய கணக்கீடு முறையும் இதில் உள்ள மறைமுக வருவாயும்!

தமிழ்நாடு மின் வாரிய கணக்கீடு முறையும் இதில் உள்ள மறைமுக வருவாயும்!

தற்பொழுது இரு மாதம் ஒரு முறை மட்டுமே கணக்கீடு செய்து கட்டணம் வசூல் செய்ய படுகின்றது. இதில்
100 அலகு (100 units) இலவசம்.
மீதம் உள்ள அலகுக்கு மட்டும் தான் கட்டணம் வசூல் செய்வார்கள்.

தற்சமயம், கணக்கு எடுக்க தவறினால் முந்தைய மாத கணக்கின் படி கட்டணம் செலுத்தவேண்டும் . 

இங்கு தான் ஒரு சிறு திருத்தம் நடைமுறையில் மறைமுகமாக நடக்கின்றது. 

4மாதம் ஒரு முறை கணக்கீடு செய்து, 200 units இலவசம் மட்டும் பொக மீதி அலகுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது, சரியாக இருக்கும்.

இங்கும் மொத்த அலகை இரண்டாக பிரித்து பின்பு 100 அலகு குறைத்து, மாதம் கணக்கீடு முறையில் கணக்கிட்டால் நமக்கு லாபம். 
இல்லை என்றால், மொத்த அலகு ஒரு குறிப்பிட்ட அளவு கடந்த காரணத்தால் அதிக தொகை நீங்கள் தர நேரிடும்.

ஆனால்

மொத்த அலகுக்கு கணக்கிட்டு விட்டு அதில் 200 units பின்பு குறைத்தல்.
பணமதிப்பில் மறைமுகமாக அதிக அளவில் பயனீட்டு கட்டணத்தில் கணக்கீடு செய்து, பின் இலவச அலகு குறைக்க , நமக்கு தான் கட்டணம் அதிகம் இருக்கும்.

இந்த முறை கணக்கீடு நடைபெறுகின்றது. 

இந்த கணக்கீட்டு முறையில் மறைமுக கட்டண உயர்வு நடைபெறுகிறது. 

மாதம் மாதம் கணக்கீடு செய்து கட்டணம் வசூல் செய்து வந்தால் நமக்கு எப்பொழுதும் கட்டணம் கட்டும் நிலை வராது, 100 unit's இலவசம் இருக்கும் வரை! ( மாதம் 50 units இலவசம்)!.



Wednesday, March 23, 2022

விடுதலை_அன்ரன்_பாலசிங்கம்

Link : Viduthalai_Balasingam
Link : மேதகு பிரபாகரன் அவர்கள்

விடுதலை_அன்ரன்_பாலசிங்கம்

இலங்கை வாழ் தமிழருக்காக போராடிய விடுதலை புலிகள் இயக்கத்தில் அரசியல் ஆலோசகர், மேதகு பிரபாகரன் அவர்களின் மதிப்பிற்கு உரியவர்.

அவர் எழுதிய " விடுதலை " என்ற நூல் சமகால அரசியல் நிலைகள் மற்றும் வேறுபாடுகள் பற்றி அறிய உதவும்.

Sunday, March 13, 2022

நாடகத்தில் ஒரு காட்சி - உச்சம்

அன்று அந்த ஒரு செயல், அந்த பெரியவரிடம் இருந்து எதிர் பார்க்கப்பட்டது, அவர் பெரிய மனிதர் என்ற எண்ணம் இருந்ததால். ஆனால் அவரால் இயன்ற, முடியும் என்ற செயலை செய்யாமல் இருந்து, லட்சங்களில் மரணம் நிகழ காரணமாய் இருந்தது மட்டும் இன்றி, ஒரு உச்சபட்ச நாடகம் ஒன்றினை தன்னுடைய குடும்ப நலம் வேண்டி, குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக ஒரு இடத்தில் ஒன்று கூடி,  எல்லாம் முடிந்த பின்பு , என்னால் எல்லாம் நன்றாக முடிந்தது என்று சொல்லி, வஞ்சித்தார்கள்.


ஆனால் இன்று, இந்த ஒரு செயல்,  இவரிடம் இருந்து எதிர் பார்க்கப்படவில்லை, பெரிய மனிதர் என்ற எண்ணம் இருந்ததால். ஆனால் இவரால் இயன்ற, முடியும் என்ற செயலை செய்யாமல் இருந்துவிட்டு, முடியாத செயலை, முடியும் என்று ஒரு உச்சபட்ச நாடகம் ஒன்றினை தன்னுடைய குடும்ப நலம் வேண்டி, குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக ஒன்று கூடி, எல்லாம் முடிந்த பின்பு , என்னால் எல்லாம் நன்றாக முடிந்தது என்று சொல்லி, வஞ்சிக்கின்ரணர்.

முதலில் சொன்னது தொப்பில் கொடி உயிர்களின் ஓலம். அதற்கு ஒரு நாடகம்  நடந்தது, 

இரண்டாவது உக்கிரைன் மூலம் ஆதாயம் தேட நினைக்கும் ஓநாய்களின் ஓலம்.

ஆனால், ஒரு சிறு வித்தியாசம் , அன்று மேலே இருந்தது ஒரு காட்சி, இன்று மேலே இருப்பது ஒரு காட்சி.

ஆனால், இரண்டு நிலையிலும், கீழே இருந்த கட்சி ஒன்று, காட்சியும் ஒன்று.

புரிந்து கொண்டார், புத்திசாலி.







Monday, November 15, 2021

நாட்டுக்கு நல்லதல்ல நாத்திகம்

கடவுள் மீது நம்பிக்கை கொண்ட பிராமணர் அல்லாத ஜாதியை சார்ந்த ஹிந்து நான். கடவுள் நம்பிக்கை இருப்பதால், 'கேப்பையில் நெய் ஒழுகுகிறது' என்பதை நம்பும் மூடநம்பிக்கை உள்ளவனும் அல்ல.
அதே நேரத்தில், பகுத்தறிவு என்ற பெயரில், ஊரை அடித்து தன் வீட்டு உலையில் போடும் பகுத்தறிவாளனும் அல்ல.ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்து மதக் கடவுள்களையும், 3,000 ஆண்டுகளுக்கு மேலாக புத்த மதக்கடவுள்களையும், 2,000 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்துவ மதக் கடவுள்களையும், 1,400 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாம் மார்க்க கடவுள்களையும், தொன்று தொட்டு வணங்கி வரும், 700 கோடி பேருக்கு தோன்றாத பகுத்தறிவு- நாத்திக ஞானயோதயம், 18-ம் நுாற்றாண்டில் தோன்றிய அந்த தமிழக மனிதருக்கு மட்டும்தோன்றியது ஆச்சர்யம் தான்.
அவரை பின்பற்றி சில கும்பல் பிழைப்புக்கு வழி தேடி, தமிழக மக்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல், தமிழக முன்னேற்றத்தின் கல்வி, மருத்துவம், தொழில், பொருளாதார வளர்ச்சி அத்தனையிலும் குறுக்கீடு செய்து குழப்பம் விளைவித்து வருகிறது.'கடவுள் இருக்கிறார் அது உன் கண்ணுக்கு தெரிகிறதா; காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்கு தெரிகிறதா?' என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்பட பாடலில் சொல்லியுள்ளார்.

நாத்திக கும்பல்:

காற்றை கண்களால் காண முடியாது. உடலால்- உள்ளத்தால் உணர்ச்சியோடு உணர முடியும். அதுபோல, கடவுளை கண்களால் காண முடியாவிட்டாலும், உள்ளத்தால் உள்ளன்போடு உணர்ந்து, நாம் நலம் பெற்றிடலாம்.அம்மிக்கல் கொத்துபவர், சிலை செதுக்கும் சிற்பி ஆக முடியாது. தாடி வைத்தவரெல்லாம் சாக்ரடீசோ, காரல் மார்க்சோ ஆக முடியாது. கடவுள் மறுப்பு கொள்கை கடைபிடிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்காக கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் எல்லாருமே, சமூக நீதி காத்திடும் பகுத்தறிவாளர்கள் என்ற மாய பிம்பத்தை, ஒரு நாத்திக கும்பல் உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, ஹிந்து கடவுளையும், பிராமணர்களையும் கேவலமாக விமர்சித்து, நாட்டு மக்கள் மனதில் தங்கள் விலாசத்தை பதிவு செய்து, தங்கள் வயிற்று பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறது.சூரியனை மையமாக வைத்து ஒன்பது கிரகங்கள், பல கோடி ஆண்டுகளாக ஒரு நொடி கூட தாமதமாகவோ, ஒரு நொடி கூட விரைவாகவோ சுற்றி வருகிறது. பூமியில் பருவங்களை உருவாக்கி, பூமியிலிருக்கும் ஜீவராசிகளுக்கு காற்று, நீர், இயற்கை வளங்கள் வாயிலாக வாழ்வை தருவது இயற்கை.அந்த இயற்கை இறைவன் படைப்பு தான். பூமி ஒரு நொடி சுற்றுவது நின்று போனால், பூமியிலுள்ள அத்தனையும் அண்ட வெளியில் துாக்கி எறியப்படும் அபாயத்திலிருந்து நம்மை காப்பது கடவுள் தான்.

மனித விஞ்ஞானத்தால் பூமி முழுவதற்கும் மழையை வாரி வழங்க முடியுமா; பெருங்கடல்களை உருவாக்க முடியுமா?தெய்வ நம்பிக்கை என்பது மனிதருக்கு ஓர் வலிமையான கவசம் போன்றது. இறை நம்பிக்கை, இயன்ற அளவு தொல்லை துயரங்களிலிருந்து நம்மை காத்திடும் என்ற எண்ணமே, மன அழுத்தத்தை குறைத்து, மன வேதனையிலிருந்து காத்திடும்.

மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவுகளிலிருந்து கிடைக்காத தெளிவான நிம்மதி, ஆண்டவன் சந்நிதியில் நிச்சயம் நமக்கு கிடைக்கும். வலிக்கும் மனசுக்கு தீர்வு தான் ஆண்டவன் கோவில். சக மனிதர்களிடம் சொல்லி தீராத மன பாரத்தை நாம் இறக்கி வைப்பதற்காக,
இறைத்தலங்களை நோக்கி பயணிக்கிறோம்.ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு குடும்பத்தாரோடு, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முழு மனதோடு தங்கத்தேர் இழுத்தார். முதல்வரின் மனைவி உள்ளன்போடு பல கோவில்களில் விசேஷ பூஜைகள் செய்து வந்திருக்கிறார்.

தற்போது, ம.தி.மு.க., தலைமை கழக செயலராக நியமிக்கப்பட்டுள்ள, தீவிர பகுத்தறிவாளியான வைகோவின் மகன் துரை வைகோ, 'நான் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவன்' என்று வெளிப்படையாக கூறி உள்ளார்.பகுத்தறிவு பாசறையில் உள்ளோர், பாதை மாறி, பிராமணரை ஏன்
துவேஷிக்க வேண்டும்? தமிழக வளர்ச்சிக்கு எந்த வகையில் பிராமணர் இடையூராக, இடைஞ்சலாக இருந்து, சட்டம்- - ஒழுங்கு பாதிப்புக்கு காரணமாக நடந்து கொள்கின்றனரா?தங்கள் சுய லாபத்திற்காக, தேவை இல்லாத போராட்டங்கள், சாலை மறியல் போன்றவற்றை நடத்தி பொது மக்களுக்கு இன்னல்கள் தருபவர்கள் பிராமணரா?பிரிட்டீஷ் ஏகாத்தியபத்திய ஆங்கில அரசுக்கு, மறைமுகமாக ஆதரவாக, 'ஜால்ரா' தட்டியவர்களின் கூடாரம் தான் நீதிக்கட்சி. இந்த நீதிக்கட்சி வழித்தோன்றல் தான் இந்த பகுத்தறிவாளர்கள்.
மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே உலகில் அவதரித்த உத்தம புருஷர்கள் போல் பகல் வேஷம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.வீட்டில் புதையல் கிடைக்கும் என்ற மோசடி பூசாரியின் பேச்சை கேட்டு, பெற்ற பிள்ளையை பலி கொடுப்பதும், வீட்டிலுள்ள நகைகளை வைத்து பூஜை செய்து நகைகளை பறிகொடுப்பதும் இன்றும் நடக்கிறது.


சாஸ்திர சம்பிரதாயம்:

பகுத்தறிவாளர்கள் நிறைந்தநம் நாட்டில் இந்நிலை இன்னும் மாறவில்லையே. இதற்கு காரணம், பகுத்தறிவாளர்களின் பேச்சு, தமிழகத்தில் எடுபடாதது தானா...ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஸ்ரீராமானுஜர் என்ற ஹிந்து மத இறைத் தோன்றல், ஹரிஜனங்களை கோவிலுக்குள் சென்று வழிபட பெரு முயற்சி எடுத்து, எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து வெற்றி கொடி நாட்டிய சமுதாய சீர்திருத்தவாதி.பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே ராஜாராம் மோகன்ராய் என்ற மாமனிதர், கணவரை இழந்த விதவைகள் தீக்குழியில் விழுந்து உயிர் விடும் கொடுமையான, 'சதி' என்ற சாஸ்திர சம்பிரதாயத்தை மாற்றி அமைத்தார்.

சமுதாயத்தில் விதவைகள் மறுமணம் புரிந்து சீரோடும், சிறப்போடும் வாழ வழி வகுத்த, சுயநலம் ஏதுமின்றி தொண்டாற்றிய உண்மையான பகுத்தறிவு சமூக நீதியாளர் அவர். தமிழகத்தில் நடைபெறும் ஜாதி கலவரங்களுக்கு, பிராமணரா காரணம்... தண்ணீர் கிணறு, சுடுகாடு, கோயில் திருவிழாக்கள் இவைகளில் குதர்க்கம் செய்து கலவரங்களை துாண்டுபவர்கள் எந்த ஜாதியினர்? தாழ்த்தப்பட்டவர்களுக்கான பாப்பாபட்டி, கீரிபட்டி பஞ்சாயத்து பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இனத்தவர் அமர முடியாமல் தடுத்து, தகராறு செய்பவர்கள் பிராமணரா?
அப்படியே பதவியில் அமர்ந்தாலும், கொலு பொம்மை போல நிர்வாகம் எதுவும் செய்ய விடாமல், வேற்று ஜாதிக்காரர், 'பினாமி'யாக நிர்வாகம் செய்வது பிராமணரா? தலித் சமுதாயத்தின் நலத்திற்காக அவதாரம் எடுத்ததை போல் நடித்து கொண்டிருக்கும், தலித் தலைவர்கள் இந்த விஷயத்தை வீரியமாக ஏன்
மக்கள் மத்தியிலும், அரசிடம் எடுத்து கொண்டு செல்வதில்லை? தமிழகத்தின் பெரிய, நடுத்தர, சிறிய கோயில்களிலும், பல்லாயிரக்கணக்கான முச்சந்தி விநாயகர் கோவில்களிலும் அர்ச்சனை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்திலும், பக்தர்கள் செலுத்தும் சிறு காணிக்கைகளிலும், தங்கள் வாழ்வாதாரத்தை
ஓட்டி வருகின்றனர் ஒரு பகுதி பிராமணர்.

மற்றொரு பகுதியினரோ, கல்வித் தகுதியால் யாருடைய பின் பலமுமின்றி, நல்ல பதவிகளில் பணியாற்றி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று யாருக்கும் பிரச்னை தராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.மூடப்பழக்கங்களை ஒழிக்கும் போர்வையில், குறிப்பாக ஹிந்து கடவுளையும், பிராமணரையும்
குறி வைப்பது ஏன்? ஜாதி மாறியுள்ள காதலர்களை, கூலிப்படை வைத்து ஆணவக் கொலை செய்வது பிராமணரா?பகுத்தறிவு என பிரசாரம் செய்து, கூட்டத்தை சேர்த்து, அறக்கட்டளை அமைத்து, கோடிகளை குவித்து, அசையா சொத்துக்களை ஒரு பத்து பேர் ஆண்டு அனுபவிப்பது தான், பகுத்தறிவு நாத்திக சமூக நீதியா?
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும், விளிம்பு நிலையிலுள்ள மக்களை பட்டியல் இனத்தில் அமர வைத்து கொண்டு, அடுத்த வேலை சோற்றுக்கு அவர்களை அல்லாட வைப்பது தான் சமூக நீதி பகுத்தறிவா? ஒரு கிராம் தங்கம் கூட இல்லாத நிலையில் வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு, கல்வியறிவு இன்றி இருக்கும் இருளர், குறவர் போன்ற சமுதாயத்தினர் தமிழர்கள் தானே... அவர்கள்
முன்னேற்றத்திற்கு பகுத்தறிவாளர்கள் இது வரை என்ன செய்துள்ளனர்?

இந்தியாவிலேயே கடவுள் மறுப்பு கொள்கை உள்ள நாத்திக பகுத்தறிவாளர்களை, தமிழகத்தை தவிர வேறு எங்கும் காண முடியாது. கிறிஸ்துவ மதத்திலோ, புத்த மதத்திலோ, சீக்கிய மதத்திலோ, இஸ்லாம் மார்கத்திலோ கடவுள் மறுப்பாளர்களை காண முடியாது!முண்டாசு கவிஞன் பாரதி, சுதந்திர உணர்வையும், தமிழ் மொழியின் பெருமையையும், -தமிழ் நாட்டின் அருமைகளையும் கவிதை வரிகளில் உயிர் ஜீவனோடு நீர்வீழ்ச்சியாய் கொட்டித் தீர்த்தார். அவருக்கு, காங்கிரஸ் தகுதியான மரியாதை கொடுக்கவில்லை. அவர் மறைவுக்கு பிறகு உருவான திராவிட கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.
காரணம் அவன் ஓர் ஏழை பிராமணர்.


வெட்கக்கேடு:

தமிழக காங்கிரசார் பாரதி இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளாதது வெட்கக்கேடு. வெறும் 18 பேர் மட்டும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக தகவல் கூறுகிறது. ஒரு ரவுடி, கேடிக்குகூட நுாற்றுக்கணக்கில் கூடி மக்கள் கவனத்தை ஈர்க்கின்றனர்.பாரதி ஒரு ஏழை பிராமணன் என்ற கேடு கெட்ட எண்ணத்தால் தான், 'நீராடும் கடலுடுத்த...' என்ற, மனோன்மணியத்தில் வரும் பேராசிரியர்
சுந்தரம் பிள்ளையின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக, பகுத்தறிவு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

பிற கட்சிகளும் எதிர்க்க துணிவில்லாமல் மவுனம் காத்தது கேவலம்.விண்ணுயர வள்ளுவருக்கு சிலை எழுப்பியவர்களுக்கு, 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலக' என்ற, திருக்குறளின் முதல் பாடலை புரிந்து கொள்ளாமல்,
கடவுள் மறுப்பு கொள்கையை வெறுமனே பேசி திரிவது ஏன்?பாயில் படுத்து நோயில் விழுந்தால், பகுத்தறிவு -நாத்திகம் எல்லாமே பறந்து போய்விடும் என்பது வரலாறு கற்பித்த பாடம். எனவே, இனிமேலும் நாத்திகம் பேசாமல், நாட்டில் அமைதி நிலவவும், வளர்ச்சி ஏற்படவும் இந்த, 'பகுத்தறிவாளர்கள்' தங்கள் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்!


 மா.மனோகரன் ,

சமூக ஆர்வலர்
தொடர்புக்கு: 

இ-மெயில்:mankalimanoharan @gmail.com


நன்றி

தினமலர் 

16-11-2021

https://m.dinamalar.com/detail.php?id=2890860

Friday, November 5, 2021

உயிரும் மத அரசியலும்

உயிரும் மத அரசியலும் என்கின்ற வாசகம் ஒவ்வொரு நாட்டுக்கும் பொருந்தும்.
அதிலும் குறிப்பாக இந்திய நாட்டு அரசியலுக்கு , முக்கியமாக நம் மாநிலம்  தமிழ்நாட்டுக்கு பொருந்தும்.

ஆட்சியில் இருக்கும் அரசு மதம் சார்ந்த நிகழ்வுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்து இருப்பதும், குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்வுகளில் தள்ளி இருப்பதும், ஒன்றே!

இந்தியா முழுவதும் உள்ள மக்களை,  மதம் சார்ந்த வரன்முறை என்று சொல்லி கணக்கிட்டால் , இந்து மதம் சார்ந்த மக்கள் அதிகம், மற்ற மதத்தை சார்ந்தோர் எண்ணிக்கையில் குறைவு. இவர்கள், இதனால் சிறுபான்மையினர்.

இதேபோல் நிலை மற்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

இந்தியாவில், நடக்கும் செயல்கள் மதம் சார்ந்து பார்க்கப்படுவது, கேவலமான ஒன்று. அத்துடன் "சிறுபான்மையினர்" என்ற பெயரில் , அரசியல் அமைப்புக்கள்,  சமூக பணி செய்வதே சிறப்பு!.
கீழ்த்தரமான , கேவலமான ஒன்று!


துக்கம், மதம் கடந்ததும், வேதனை தரும் ஒன்று. அதிலும், குறிப்பாக இந்த
துக்கம் சார்ந்த நிகழ்வுகளில், மதம் சார்ந்து மட்டுமே விசாரிப்புகள் செய்யும் மையங்கள், கட்சிகள் வளர்வது, 
"சிறுபான்மையினர்" எப்பொழுதும் உங்களின் ஒட்டுக்கு பயன்படும் அடிமைகள் என்று சொல்லாமல் சொல்லும் செயலாக கருதப்படலாம்.


நம் நாட்டில், சுதந்திரத்திற்கு போராடிய
முன்னோர்கள் , நமக்கு வழிகாட்டிகள்.
அவர்களின் வாழ்க்கை வரலாறு என்றும் போற்றப் படவேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் மாண்பு குறையாமல் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று, மருது பாண்டியர் தொடங்கி, முத்துராமலிங்கம் ஐயா தொட்டு, அம்பேத்கார் வரை அனைவரையும் சாதிக்கட்சிகளின் 
தலைவர்களாக மாற்றி, 
அவர்களின் மாண்பை குறைத்து, வாழ்கை வரலாறு மாற்றி, திருத்தப்பட்டு, 
தவறான முறையில் வளர்த்ததின் விளைவுகள், 
இந்த முன்னோர்கள் கம்பி குண்டுகளில் அடைக்கப்பட்டு , பேருந்து நிலைய அடையாளமாக , தெரு கண்டுபிடிக்க குறிப்பு சின்னமாக, பறவைகள் ஒதுங்கும் இடமாக இன்று உள்ளது தான், வளர்ச்சி!

இந்த முன்னோர்கள் என்ன நோக்கம் காரணமாக கம்பிகளுக்குள் இருக்கின்றனர்? 
கை,கால்,விரல், தலை என்று சொல்லி, சொல்லி உடைத்ததின்  விளைவு, சாதிக்கலவரம்.  

உடைத்தவன் யார்? 
அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
பயன் அடைந்தார் யார்?

இந்த சாதிய படிநிலை பள்ளிகளில் இருந்து கட்டமைக்கப்படு்கின்றது. 

சற்று 40 வயதை நெருங்கும், கடந்திருக்கும் பலருக்கும் சாதி கலவரம் சார்ந்த நிகழ்வுகளில் , சற்று அடிநிலை தெரியும்.

கீழ்நிலை மனிதர்களை , சாதி என்று சொல்லி பிரித்து, கலவரங்கள் செய்ய சொல்லி , பயன்படுத்திக்கொண்டு, பகை வளர்த்த சாதிச்சான்றோர்கள் இருக்க,

கலவரங்களில் , உறுப்புகள் இழந்து, இன்றும் வாழும் மனிதரின் நிலை, இந்த கேவலமான அரசியல் அமைப்புக்கள் தரும் சொற்ப பணம்? துயர் துடைக்குமா?

உயிர் இழந்த குடும்பத்திற்கு ? 

ஆனால் , காரணமானவர்கள் , சந்தோசமாக இருக்க காண்பது ?

கோவை கலவரம்? குண்டு வெடிப்பு?
பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன கிடைத்தது?
இன்றும் வாழும் மனிதர்களின் நிலை? 
யார் பொறுப்பு ஏற்பது?

பஞ்சாப் கலவரம்?
காஷ்மீர் கலவரம்?
யார் பொறுப்பு ஏற்பது?
பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன கிடைத்தது?

உன் வீட்டில், ஒரு இழப்பு என்று வந்தால் ?
கொதிக்கும் உன் நிலை?

உன்னுடைய சாதி சார்ந்த, மதம் சார்ந்த நிகழ்வுகளில் ? 
பாதிக்கப்பட்ட நபர்களின் எதிர்காலம்?
அவர்களின் பெற்றோர் , பிள்ளைகள், குடும்பம் சார்ந்த இழப்புகள் ? 
இதுவரை யாரும், எதற்குமே பொறுப்பு ஏற்றது இல்லை.

பகுத்து அறிய அறிவு வேண்டும்!
படித்தும், பகுத்தறிவு இல்லாத நிலையில் இருக்கும் கூட்டம் காண?

படித்தும் , முட்டாளாக வாழ விரும்பும் சிறந்த கூட்டம் ! காண அரிது!




Thursday, November 4, 2021

அமைதியும் இரத்தமும்

இஸ்லாத்தின் வாழ்வியல், அமைதி.

ஆனால் ,
அமைதியின் மார்கம் அமைதியாய் இருக்க கண்டோம்.
அமைதி, அடக்கம் செய்யப்பட்டதோ?

நீரும் , இரத்தமும் ஒன்றா?
குருதியின் வாடையில்
பிஞ்சை நஞ்சாக்கி , 
மண்ணில் இட, 
விதைத்தது முளை காட்ட, 
நீர் வற்றிய நெஞ்சாகி , 
வளர்ந்தது, நஞ்சு!,
நிழல் தரும் மரமல்ல!.

உன் நெஞ்சில் இல்லா நீர், 
உன் மண்ணில் ஊராதே.

உன் மனதிற்கு நீ இட்ட கரிமருந்தால்,
பாலைவனமாய் போனது 
பலரின் வாழ்வும், உன் தேசமும்.

உன் இனம் தொழும் இடமும்
உன் பிள்ளைகளின் அறிவு
வார்க்கும் இடமும்,
உன் பெண்டிரும் முன் வைக்கும் 
முதல் அடியிலும், 

நீ விதைத்த நஞ்சால் , 
சாம்பலாய் போனோர் சிலர்,
சாம்பலை மிதித்து அடி வைபோர் பலர்!

நீ கட்டும் சாம்பலின் கோபுரங்கள்
காற்றில் பறக்கும் தூசு தான்,
வளர்ந்தது மரமாய் இருப்பின்?

யாரை வளர்க்கின்றாய் ?
ஏன் வளர்க்கின்றாய் ?
எதை நோக்கி உன் பார்வை?

உன் மகளும் தவிக்கிறாள் 
பறவையாய் பறக்க அல்ல,
வெளியுலகம் கானது ,
சிறகின்றி உன்னால் !

அவள் இடும் சோற்றிலும்
இரத்த நெடி வேண்டும் - 
உன் நெஞ்சால்,

அவளின் வாழ்வும்
பாலைவனமாய், 
உன் கரிமறுந்தால் வெடித்து
சிதறிய நெஞ்சை,
உருண்டு ஓடிய கண்களை,
தொங்காடும் சதைகளை ,
உன் உணவில் சேர்த்து தின்பாயோ?

உன் இனம் உன்னால்,
உன் கரிமருந்தின் அமைதியால் ,
அமைதியின் மார்கம், 
அடக்கம் செய்யப்பட்டது!!

உன்னால் விளைந்தது,
உன்னால் வளர்ந்தது,
என்னவோ? எதுவோ?

ஆனால், 
உன்னால் அழிந்தது,
உன்னால் இழந்தது,
உன்னால் முடிந்தது 
எவ்வளவோ?

உன் தேசத்தின் குரல்,
அழுகுரலாய் கேட்கிறது!
ஆனால் உன் குரலோ?

உன் தேசத்தின் பட்டினி,
நெஞ்சை உறைய வைத்தது!
ஆனால் உன் தட்டில் மட்டும்
கறி விருந்து? 

உன் இனம் வாழ 
பிறர் இனம் அழித்தாயே?
ஆனால் உன் இனமும்
அளிக்கின்றது உன்னாலே?

யாரை காக்க செய்தாயோ?
எதை காக்க செய்தாயோ?
உன்னாலே அழிவதை காண்பாய்? 

Thursday, October 21, 2021

மண் வளத்தை பராமரிப்பது எப்படி

பயிர்களுக்கான மண் வளத்தை பராமரிப்பது எப்படி


தொடர்ந்து விவசாயம் நடைபெறும் நிலங்களில் துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம், மாங்கனீஸ், குளோரின் போன்ற நுண்ணுாட்டச்சத்துகள் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. இதனால் பயிர்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே பயிர்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் மண்வள பராமரிப்பு அவசியம்.

ரசாயன உரங்களை தனியாக இடுவதை விட அங்கக உரங்களான எரு, கம்போஸ்ட், பசுந்தாள், பசுந்தழை உரங்களுடன் சேர்த்து இடும் போது நல்ல பலன் கிடைக்கிறது. ரசாயன உரங்கள் ஆரம்பகால வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அங்கக உரங்கள் மண்ணில் சிதைந்து ஊட்டச்சத்துகளை சீராக வெளிப்படுத்தி பயிரின் வளர்ச்சி பருவம் முழுவதும் கொடுக்கிறது. மேலும் இவை பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. மண்ணை பொலபொலப்பாக்கி மண்வாழ் உயிரின பெருக்கத்திற்கும் உவர், களர், அமிலத்தன்மை உருவாகாமல் தடுக்கிறது.
மண்ணுக்கு தழைச்சத்து சேர்க்கும் பயறு வகை பயிர்களை அந்தந்த பயிருக்கான ரைசோபியம் விதைநேர்த்தி செய்து பயிரிட வேண்டும். பண்ணையில் கிடைக்கும் பயிர்க் கழிவுகளை மட்க வைத்து உரமாக தரலாம்.
சர்க்கரை ஆலை கழிவுகள், மட்கிய தேங்காய் நார் கழிவுகள், எண்ணெய் ஆலையின் புண்ணாக்கு கழிவுகளை பயன்படுத்தலாம். மாடு, ஆடு, கோழி, பன்றியின் எருவை பயன்படுத்தலாம். பசுந்தாள், பசுந்தழை உரமிடலாம்.

மண்ணில் உள்ள சத்துகளின் அளவு அடிக்கடி மாறுபடும். எனவே சத்துகளின் அளவை கண்டறிய மண் ஆய்வு செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து சுற்றுச்சூழல் மாசுபடாத அளவில் மகசூல் இலக்குக்கு ஏற்றாற்போல சமச்சீர் உரமிட வேண்டும். ஒருங்கிணைந்த மண்வள பராமரிப்புக்கு இயற்கை எரு, ரசாயன உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை சரியான விகிதத்தில் தொடர்ந்து பயன்படுத்தி நிறைவான மகசூல் பெறலாம்.

மோகன்தாஸ், 

தலைவர் பயிர் மேலாண்மை துறை வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம்
ஈச்சங்கோட்டை , 
தஞ்சை - 614 902

94880 49234

Friday, October 15, 2021

மலையில் சுழற்சி முறையில் பந்தல் காய்கறிகள்

மலைப்பகுதியாக இருந்தாலும் ஒரே பயிர் சாகுபடி செய்யாமல் பட்டர்பீன்ஸ், கொடி அவரை, சவ்சவ் என சுழற்சி முறையில் மாற்றி மாற்றி பயிர் சாகுபடி செய்கிறோம் என்கிறார் மதுரை தென்மலை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி அனுசுயா.

பந்தல் காய்கறிகள் குறித்து அவர் கூறியது: பட்டர்பீன்ஸ் 90 நாள் பயிர், கொடி அவரை, சவ்சவ் நான்காம் மாதத்திலிருந்து ஓராண்டு வரை பலன் தரும். ஒரு ஏக்கரை இரு பகுதியாக பிரித்து பட்டர்பீன்ஸ் சாகுபடி செய்துள்ளோம். பந்தல் ஒருமுறை முதலீடு செய்வது தான்.

கொடைக்கானல் மார்க்கெட்டிலிருந்து ஒன்றரை கிலோ ரூ.1500க்கு பீன்ஸ் விதைகள் வாங்குகிறோம். விதைப்பதற்கு முன்பாக மண்ணை கொத்தி கிளறி தண்ணீர் ஊற்றுவோம். மறுநாள் சிறு சிறு சதுரமாக வெட்டி அதில் பீன்ஸ் விதையை ஊன்றுவோம். 4வது நாள் தண்ணீர் விட்டால் 8 ம் நாள் முளைவிடும். நான்கு இலை பயிராக வந்தவுடன் களை எடுத்துவிட்டு யூரியா துாவி தண்ணீர் விடுவோம்.

15வது நாள் கொடி படர ஆரம்பிக்கும். துாரில் உள்ள இரண்டு இலையில் நுாலை கட்டி பந்தலில் சேர்த்து கட்டி விடுவோம். 30ம் நாளில் பிஞ்சுவிடும். 60 ம் நாளில் காய் காய்க்க ஆரம்பிக்கும். 60 - 90 வரை நாள் வரை அறுவடை செய்யலாம். தினமும் 150 கிலோ வரை கிடைக்கும். 10 கிலோ ரூ.1000க்கு விற்போம்.

90 நாளில் கொடி காய்ந்து விடும். அதை வேருடன் பிடுங்கி விட்டு ஒரு பகுதியில் சவ்சவ், ஒரு பகுதியில் அவரை சாகுபடி செய்வோம். சவ்சவ் 3ம் மாதத்தில் பந்தலில் படர்ந்து விடும். 4வது மாதம் ஓராண்டு வரை காய்க்கும். ஏக்கருக்கு குறைந்தது 3 டன் காய்கள் கிடைக்கும். மழை பெய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

அவரையும் விதை போட்ட 8 ம் நாள் முளைவிடும். 4வது மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு தினமும் 2 மூடை காய் கிடைக்கும். விலையைப் பொறுத்து ரூ.30 - 40 வரை கிலோவுக்கு கிடைக்கும்

Wednesday, September 29, 2021

சுயநலம்

தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று, இன்று நாம் இருக்கும் நிலைக்கு நம்முடைய வாழ்வியல் முறைகளே காரணம்.

கூட்டு குடும்பமாக நாம் இன்று வாழ விரும்பவில்லை. காரணம் , தேடிக்கொண்ட வாழ்வியல் சூழல்.  

இந்த வாழ்வியல் சூழல் , நம் உறவுகளை நம் பிள்ளைகளுக்கு அடையாளப்படுத்த, உறவுகளை மேம்படுத்த , எப்படி உதவும்?. 
இவைகளை நாம் களைய முற்படவில்லை என்பதும் உண்மை.

உறவுகளை சொல்லித்தர நாம் தயாராக இருக்க வேண்டும். முதலில் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். அனைவரும் உறவுகளை விட்டு தள்ளி இருக்க காரணம் பணம். பணம் கொண்டு பகை வளர்த்த காரணத்தால் எட்ட நிற்க வேண்டிய நிலை.

இந்த பணம் சம்பாதிக்க செல்லும் போது வரும் புது உறவுகள் சில மட்டுமே உண்மையாக இருக்கும்.

அங்கிள், ஆன்டி என்று சொல்லி தரும் நாம், அந்த வார்த்தைகளை பிள்ளைகள் பேசும்போது பெருமைப்படும் நாம், சரியான முறையில் உறவுகளை சொல்லி தந்தால் நன்று.

ஏன் என்றால், குலம் , கோத்திரம் என்று சொல்லுவார்கள். நம்மில் எத்தனை பேருக்கு இன்று உங்களின் குலப்பெயர், கோத்திரம் தெரியும்?

என்ன காரணத்திற்காக இவைகள் உண்டானது?
நாம் ஒருவரின் காரிய சடங்கு செய்யும் பொழுது மூன்று தலைமுறை வம்சாவளி முன்னோர் பெயரை சொல்ல வேண்டும். 
எத்தனை பேருக்கு இவைகள் தெரியும்?

உடன் பிறந்தவர்களை தவிர யாரையும் திருமணம் செய்யலாம் என்ற  ஒரு முறை இன்று நம் சமகால வாழ்வில் வளர்ந்து வருகின்றது. 

குலம் , உண்டானது இது போன்ற முறைகள் வராமல் இருக்க உருவாக்கப்பட்டது. நாம் பின்பற்ற தவறியதால் , உறவு முறையில் அண்ணன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்கின்ற உலகில் வாழ்கின்றோம்.

சரி, ஒரு சிறு சந்தேகம்,

இஸ்லாம் விஸ்தரிக்க முயற்சி செய்வதின் விளைவு நம் கண்முன் நடக்கும் போர்கள்.


ஏன் கிருஸ்துவம் மட்டும் உலகம் முழுவதும் பரவி வருகின்றது?
பரப்பப்படுகின்றது? 

என்ன நோக்கம்? என்ன பயன்?

உதவிகள் செய்ய , உதவிகள் பெற மதம் என்ன கருவியா?

மதம் கடந்து , மனம் விரும்பி திருமணம் செய்யும் பொழுது எங்கிருந்து வந்தது மதம்?

இந்து மதம் சார்ந்த நபர் மட்டும் மதம் மாறவேண்டும். மற்ற மதத்தை தேடி சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
ஆனால், இந்த திருமணத்தில் இந்து மதம் சார்ந்த வீட்டார் , பிள்ளைகளின் மனம் போல வாழ வழி விடுகின்றனர். மதம் மாறுகின்றனர். மற்ற மதத்தில் சிலர் மட்டும் மதம் கடந்து பார்க்கும் பார்க்கின்றனர்.

மதம் மாற வில்லை என்றால் , திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி மற்ற மதத்தினர் , அவர்களின் பிள்ளைகளின் நலன் கடந்து மதத்தின் மீது பற்று கொள்கின்றனர்.

எல்லாம் சம்மதம் என்று சொல்லும் இந்து மதம் மட்டும் எல்லோருக்கும் கசக்கிறது.


சுயநலமாக வாழ தொடங்கியதால் வந்தது.


தொடரும் ... பகுதி 6...




Monday, September 27, 2021

குல தெய்வம்

குலதெய்வம் என்று கூறி வழிபாடு செய்கின்றோம்.
யார் குலதெய்வம் ?

உனக்கு தெரிந்து உன் தந்தை உன் வழிகாட்டி. உன் தாத்தா உன் முன்னோர், உன் தந்தைக்கு வழிகாட்டி.

இது போன்ற முன்னோர், குலம் காத்தவர், குலம் வாழ வழி தந்தவர்.
இவர்களை தான் நாம் தெய்வமாய் வழிபடுகிறோம். 
மற்ற மதங்களில் இந்த முன்னோர் வழிபாடு கிடையாது.

இஸ்லாம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தது.
கிறித்துவம் வெள்ளையர்களின் வருகையால் வந்தது.

அடிமை முறையை ஏற்றுக்கொண்ட சிலர் மதம் மாறினர். அவர்களின் வழி வந்தவர்கள் அதை தொடர்ந்து வருகின்றனர். 

ஆனால், இப்பொழுது மதம் மாற்றம் செய்யப்படும் பலரும் லாபம் சார்ந்த தொழிலாக பார்க்கின்றனர்.

பிழைக்க ஒரு மதம், படிப்பு ,வேலை  இட ஒதுக்கீடு என்று வரும் பொழுது மற்ற மதம் என்றும், மற்ற சாதி என்றும் கூறி வருவதை பார்க்க முடியும்.

சமயம் பற்றிய ஆய்வும், மொழி பற்றிய பகுப்பாய்வும் இல்லாத அளவுக்கு பணம், மேம்பட்ட  வாழ்நிலை மீது கொண்ட ஈர்பும் நம்மை நம்முடைய மண் மீதும் அக்கறை குறைய காரணம் ஆனது.

மதம் சார்ந்த தொழிலாக அரசியல் அமைப்புக்கள் மாறியது மேலும் நம் மதம் நசுக்க படும் என்ற அட்சத்தை உருவாக்கி உள்ளது. 

இந்த மாற்றங்கள் ஏதோ அரசியலால் நடந்தது என்று புறம் தள்ள இயலாது.
நாம் சுயநலமாக வாழ தொடங்கியதில் இருந்து வந்தது.

தொடரும் ... பகுதி 5

Wednesday, September 15, 2021

ரசாயனத்திடம் பாடம் கற்று இயற்கைக்கு மாறினேன்

ரசாயனத்திடம் பாடம் கற்று இயற்கைக்கு மாறினேன்


ஒன்பது ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்தேன். நல்ல சாகுபடி நிறைய விளைச்சல். பூச்சித்தொல்லைக்காக மருந்து தெளித்தேன். மண்ணும் பயிர்களும் வீணானது. முருங்கையை அழித்து விட்டு மொத்தமாக இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன் என்கிறார் மதுரை திருமங்கலம் சவுடார்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுப்புராஜ்.

இயற்கை என்றால் விதைகள் முதல் உரம், பூச்சிக்கொல்லி அனைத்தையும் வயலிலேயே தயாரித்து விளைச்சலை பெருக்கும் நுட்பத்தை விவரிக்கிறார் சுப்புராஜ்.
நானும் மனைவி பாரதியும் தோட்டத்தை பராமரிக்கிறோம். எங்களிடம் 3 நாட்டு மாடுகள் உள்ளன. அதன் மூலம் ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். இயற்கை உரங்களை தண்ணீரில் கரைத்து சொட்டுநீர் முறையில் பயிருக்கு பாய்ச்சுகிறோம். மொத்த முள்ள 33 ஏக்கரிலும் இயற்கை விவசாயம் தான். ஏக்கர் வாரியாக பிரித்து நாரத்தை, அத்தி, சீத்தா, கொய்யா, கொடுக்காபுளி, நாவல், சப்போட்டா, நெல்லிக்காய், சிவப்பு கொய்யா மரங்களை பராமரிக்கிறேன்.

திருமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரபா வழிகாட்டுதலில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு எக்டேர் கொடுக்காப்புளிக்கு ரூ.20ஆயிரம், அரை எக்டேர் அத்திக்கு ரூ.15 ஆயிரம் மானியம் பெற்றோம். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் அடர்நடவு கொய்யா 1.20 எக்டேர் சாகுபடிக்கு ரூ.21ஆயிரத்து120 மானியம், சொட்டு நீர் பாசனத்தின் கீழ் 4.71 எக்டேருக்கு ரூ.ஒரு லட்சத்து 81ஆயிரத்து 417 மானியம் பெற்றோம். மனைவி பாரதியின் பெயரில் 3.78 எக்டேர் சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.ஒரு லட்சத்து 14ஆயிரத்து 400 மானியம் பெற்றுள்ளோம்.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறைக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

தோட்டத்தில் உள்ள இலை, தழைகளை மட்க செய்து குப்பை உரமாக மாற்றுவேன். வாரந்தோறும் குப்பை உரம், ஜீவாமிர்தம், எருக்கஞ்செடி சாறு, நுண்ணுாட்ட கரைசல் என தேவைக்கேற்ப கலந்து பயிருக்கு பாய்ச்சுகிறேன். எருக்கஞ்செடியை கிளைகளுடன் பறித்து சிறு துண்டுகளாக வெட்டி 200 லிட்டர் தண்ணீரில் 10 நாட்கள் ஊறவைக்கிறோம். தினமும் நன்றாக கலக்கி விட்ட பின் அதை கொய்யா, அத்தி மரங்களுக்கு பாய்ச்சுவதால் போரான் சத்துகள் கிடைக்கிறது. இதுதவிர மீன் அமிலமும் தயாரிக்கிறோம்.
பூச்சிக்கொல்லிக்கு இயற்கை முறையில் பயிர்களுக்கும் மண்ணுக்கும் பாதுகாப்பான திரவ மருந்துகளை பயன்படுத்துகிறேன்.

ஜீவாமிர்தம் பாய்ச்சினாலே மண்ணின் தன்மை பொலபொலப்பாகும். மண்புழுக்கள் பெருகும். மண்புழு உரம் தனியாக கொடுக்க வேண்டியதில்லை. எந்த இடத்தையும் எந்த சூழ்நிலையிலும் தரிசாக விடுவதில்லை. அவ்வப்போது பசுந்தாள் பயிர்களை நடவு செய்து மடக்கி உழுது மண்ணை பொன்னாக்குகிறோம். இதனால் மண்ணும் மனிதனுக்கும் கேடில்லாத இயற்கையான பழங்களை உற்பத்தி செய்யும் மனதிருப்தி கிடைக்கிறது
என்றார். அலைபேசி: 99408 33727.
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை

The Kashmir Only to India