Friday, November 5, 2021

உயிரும் மத அரசியலும்

உயிரும் மத அரசியலும் என்கின்ற வாசகம் ஒவ்வொரு நாட்டுக்கும் பொருந்தும்.
அதிலும் குறிப்பாக இந்திய நாட்டு அரசியலுக்கு , முக்கியமாக நம் மாநிலம்  தமிழ்நாட்டுக்கு பொருந்தும்.

ஆட்சியில் இருக்கும் அரசு மதம் சார்ந்த நிகழ்வுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்து இருப்பதும், குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்வுகளில் தள்ளி இருப்பதும், ஒன்றே!

இந்தியா முழுவதும் உள்ள மக்களை,  மதம் சார்ந்த வரன்முறை என்று சொல்லி கணக்கிட்டால் , இந்து மதம் சார்ந்த மக்கள் அதிகம், மற்ற மதத்தை சார்ந்தோர் எண்ணிக்கையில் குறைவு. இவர்கள், இதனால் சிறுபான்மையினர்.

இதேபோல் நிலை மற்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

இந்தியாவில், நடக்கும் செயல்கள் மதம் சார்ந்து பார்க்கப்படுவது, கேவலமான ஒன்று. அத்துடன் "சிறுபான்மையினர்" என்ற பெயரில் , அரசியல் அமைப்புக்கள்,  சமூக பணி செய்வதே சிறப்பு!.
கீழ்த்தரமான , கேவலமான ஒன்று!


துக்கம், மதம் கடந்ததும், வேதனை தரும் ஒன்று. அதிலும், குறிப்பாக இந்த
துக்கம் சார்ந்த நிகழ்வுகளில், மதம் சார்ந்து மட்டுமே விசாரிப்புகள் செய்யும் மையங்கள், கட்சிகள் வளர்வது, 
"சிறுபான்மையினர்" எப்பொழுதும் உங்களின் ஒட்டுக்கு பயன்படும் அடிமைகள் என்று சொல்லாமல் சொல்லும் செயலாக கருதப்படலாம்.


நம் நாட்டில், சுதந்திரத்திற்கு போராடிய
முன்னோர்கள் , நமக்கு வழிகாட்டிகள்.
அவர்களின் வாழ்க்கை வரலாறு என்றும் போற்றப் படவேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் மாண்பு குறையாமல் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று, மருது பாண்டியர் தொடங்கி, முத்துராமலிங்கம் ஐயா தொட்டு, அம்பேத்கார் வரை அனைவரையும் சாதிக்கட்சிகளின் 
தலைவர்களாக மாற்றி, 
அவர்களின் மாண்பை குறைத்து, வாழ்கை வரலாறு மாற்றி, திருத்தப்பட்டு, 
தவறான முறையில் வளர்த்ததின் விளைவுகள், 
இந்த முன்னோர்கள் கம்பி குண்டுகளில் அடைக்கப்பட்டு , பேருந்து நிலைய அடையாளமாக , தெரு கண்டுபிடிக்க குறிப்பு சின்னமாக, பறவைகள் ஒதுங்கும் இடமாக இன்று உள்ளது தான், வளர்ச்சி!

இந்த முன்னோர்கள் என்ன நோக்கம் காரணமாக கம்பிகளுக்குள் இருக்கின்றனர்? 
கை,கால்,விரல், தலை என்று சொல்லி, சொல்லி உடைத்ததின்  விளைவு, சாதிக்கலவரம்.  

உடைத்தவன் யார்? 
அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
பயன் அடைந்தார் யார்?

இந்த சாதிய படிநிலை பள்ளிகளில் இருந்து கட்டமைக்கப்படு்கின்றது. 

சற்று 40 வயதை நெருங்கும், கடந்திருக்கும் பலருக்கும் சாதி கலவரம் சார்ந்த நிகழ்வுகளில் , சற்று அடிநிலை தெரியும்.

கீழ்நிலை மனிதர்களை , சாதி என்று சொல்லி பிரித்து, கலவரங்கள் செய்ய சொல்லி , பயன்படுத்திக்கொண்டு, பகை வளர்த்த சாதிச்சான்றோர்கள் இருக்க,

கலவரங்களில் , உறுப்புகள் இழந்து, இன்றும் வாழும் மனிதரின் நிலை, இந்த கேவலமான அரசியல் அமைப்புக்கள் தரும் சொற்ப பணம்? துயர் துடைக்குமா?

உயிர் இழந்த குடும்பத்திற்கு ? 

ஆனால் , காரணமானவர்கள் , சந்தோசமாக இருக்க காண்பது ?

கோவை கலவரம்? குண்டு வெடிப்பு?
பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன கிடைத்தது?
இன்றும் வாழும் மனிதர்களின் நிலை? 
யார் பொறுப்பு ஏற்பது?

பஞ்சாப் கலவரம்?
காஷ்மீர் கலவரம்?
யார் பொறுப்பு ஏற்பது?
பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன கிடைத்தது?

உன் வீட்டில், ஒரு இழப்பு என்று வந்தால் ?
கொதிக்கும் உன் நிலை?

உன்னுடைய சாதி சார்ந்த, மதம் சார்ந்த நிகழ்வுகளில் ? 
பாதிக்கப்பட்ட நபர்களின் எதிர்காலம்?
அவர்களின் பெற்றோர் , பிள்ளைகள், குடும்பம் சார்ந்த இழப்புகள் ? 
இதுவரை யாரும், எதற்குமே பொறுப்பு ஏற்றது இல்லை.

பகுத்து அறிய அறிவு வேண்டும்!
படித்தும், பகுத்தறிவு இல்லாத நிலையில் இருக்கும் கூட்டம் காண?

படித்தும் , முட்டாளாக வாழ விரும்பும் சிறந்த கூட்டம் ! காண அரிது!




No comments:

Post a Comment