Saturday, September 4, 2021

லாபகரமான மாட்டுப்பண்ணை பராமரிப்பு முறை

லாபகரமான மாட்டுப்பண்ணை அமைக்க வேண்டுமெனில் மாடுகள் பால் உற்பத்தி திறனுடன் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.


நோய் எதிர்ப்புத் திறன் அதிகமுள்ள மாடு, கன்றுகள் தொற்றால் பாதிக்கப்படுவதில்லை. சிலர் கறவையிலுள்ள மாடுகளில் பால் குறையும் என்பதற்காக தடுப்பூசி போடுவதை நிறுத்தி விடுவர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கால்நடை டாக்டர் ஆலோசனை மூலம் பண்ணை மாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும்.
நச்சுத்தன்மையற்ற தீவனம், காற்றோட்டத்துடன் கூடிய சுகாதாரமான கொட்டகை ஆகியவை கால்நடைகளுக்கு தேவை. தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டியைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
மாதம் ஒரு முறை தண்ணீர் தொட்டிக்கு சுண்ணாம்பு பூசவேண்டும். சாணத்தை 300 அடி தள்ளி குழி தோண்டி கொட்ட வேண்டும். பண்ணைக்கு முன்பாக கிருமி நாசினி மருந்து கலந்த தண்ணீரில் காலை கழுவிய பின் உள்ளே நுழைந்தால் நோய்க்கிருமிகள் பண்ணைக்குள் நுழைவதை தடுக்கலாம். பால் கறக்கும் இயந்திரம் பயன்படுத்தும் போது கறவை முடிந்தவுடன் பால் இயந்திரத்தின் ரப்பர் பாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். பால் காம்பை கறக்கும் முன்பும் கறந்த பின்பும் 0.5 சதவிகிதம் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீரால் கழுவ வேண்டும்.
பேராசிரியர் உமாராணி
கால்நடை சிகிச்சை வளாகம்
கால்நடை மருத்துவ கல்லுாரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி
kamleshharini@yahoo.com

No comments:

Post a Comment