Thursday, August 23, 2018

'ஹைபர்சானிக்' விமானம்

'ஹைபர்சானிக்' விமானம்:


உலகின் முன்னணி விமான நிறுவனம் போயிங். தலைமையகம் வாஷிங்டன். 
2016 கணக்கின் படி, 750 பயணிகள் விமானங்கள், 180 ராணுவ விமானங்கள், 5 செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் 'ஹைபர்சானிக்' பயணிகள் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 

'ஹைபர்சானிக்' என்பது ஒலியின்(SOUND) வேகத்தை விட, ஐந்து மடங்கு அதிகம்.


வானியல் வேகத்தை 'மாக்' எண் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர்.
 'மாக் 1' என்பது ஒலியின் சராசரி வேகத்தை குறிக்கிறது. அதாவது ஒலியின் வேகம் என்பது, மணிக்கு 1,235 கி.மீ./HOUR இதனை 'டிரான்ஸ்சானிக்' என குறிப்பிடுவர். 

அதேபோல 'மாக்' எண் 1 - 5 வரை உள்ள வேகத்தை, 'சூப்பர்சானிக்' என குறிப்பிடுகின்றனர். இது மணிக்கு 1,470 - 6,126 கி.மீ./HOUR, வேகம் வரை செல்லும்.

'மாக்' 5 - 10 வரை உள்ள வேகத்தை 'ஹைபர்சானிக்' எனப்படுகிறது. இது மணிக்கு 6,125 - 12,251 கி.மீ./HOUR, வேகத்தில் செல்லும். 

இதற்கு மேல் 'ஹை ஹைபர்சானிக்', 'ரீ என்ட்ரி' போன்றவை உள்ளன. 

'மாக்' 1ஐ விட குறைவான வேகத்தை 'சப்சானிக்' என அழைக்கின்றனர். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 980 கி.மீ/HOUR. இந்த வேகத்தில் தான் தற்போதைய பயணிகள் விமானங்கள் பயணிக்கின்றன.

No comments:

Post a Comment