Monday, August 20, 2018

தென்மேற்கு பருவமழையில் "கேரளம்"



இந்த ஆகஸ்ட் மாதத்தில் நமது அண்டை மாநிலமான கேரளம் தென்மேற்கு பருவமழையின் காரணமாக மிகவும்  பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

எப்பொழுதும் கேரளம் ஒரு வசீகரமான ,  இயற்கை அழகு கொண்ட இதமான தட்பவெப்பநிலை கொண்ட மாநிலம் . இந்த அழகு தேசம் இன்று இருக்கும் அவல நிலையை கண்டால் உள்ளம் பதைக்கிறது .
ஆனால் அங்கு உள்ள அரசியல் வாதிகளை கண்டால் கோபம் தான் வருகிறது.

இந்த மழையில் மக்கள் தாளா துயரத்தில் உள்ள நிலையில் பெரியார் அணையின் நீர் சேமிப்பு தொடர்பாக  வழக்கு தொடுக்கப்பட்டு , அதுவும் ஏதோ
உரிமை போராட்டம் போல ஒரு உருவகம் செய்து தமிழர்களை என்றும் எதிரிகள் போலவே சித்தரித்து அரசியல் செய்வது வேதனையை  தான் தருகின்றது.

சரி , (1) பெரியார் அணையில் உண்மையில் நடப்பது என்ன?.  (2) ஏன் அவசர வழக்கு தொடுக்க பட்டது ?  ( 3) முகாந்திரம் உள்ளதா?


    தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளம் நல்ல மழை பொலிவை பெற்ற பொழுது தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரளா மலை பகுதிகளிலும் பெய்த மழையால் பெரியார் அணை நிரம்பி வந்தது . அணையின் உயரம் 152 அடி. நீர் தேக்க அனுமதி 142.அடி. இந்த 142 அடி நிரம்பிய பிறகு வரும் நீர் கேரளம் பகுதி வழியாக இடுக்கி அணைக்கு கொண்டுசெல்லப்படும் .
தற்பொழுது ஏற்கனவே இடுக்கி நிரம்பிய நிலையில் பெரியார் அணையும் நிரம்பி விட்டது. கேரள முதல்வர் நீர் தேக்கும் 142 அடியை 139 அடிக்கு குறைக்க வேண்டும் என்கிறார் . பொதுநல வழக்கு தொடர்கிறார்கள் .

ஏற்கனவே  உள்ள மழை நீர் வடிய வழி இல்லாதா நிலையில்,  மேற்கொண்டு அணையில் குறைக்கும்(திறக்கும்)  3 அடிக்கான (142-139=3) தண்ணீர் கேரளம் பகுதிக்கே திறந்து விட்ட கேரளா பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கேரளா முதல்வரும் வழக்கை விசாரித்த நீதிபதியும் எதை உத்தேசித்து இந்த வேலையை செய்தார்கள் என்று என்னும் பொழுது , கேரளா மக்கள் தான் கண் முன் வருகின்றார்கள் .  அனைத்து உதவிகளும் தமிழர்கள் தானாக முன்வந்து எங்களின் அண்டை மாநில மக்கள் என்கின்ற எண்ணம் கொண்டு தாராளமாக வாரி வாரி தந்தாலும் அங்குள்ள குள்ளநரிகள் தவறான தகவல்களை பரப்பியதோடு இன்றி இன்னும் அரசியல் செய்யும் மனப்பாங்கு கேவலமான ஒரு செயல் .

உண்மையில் மக்களை காக்க எண்ணி இருந்தால் 3 அடி தண்ணீர் அதிகமாக , அதாவது 145அடிவரை தண்ணீரை சேமித்து கேரளம் பகுதிக்கு நீரை திறக்காமல் தாமதப்படுத்த செய்து அதுவரை தமிழகப்பகுதிக்கு கூடுதல் நீர் கொடுத்து மக்களையும் காத்திருக்கலாம் . (அண்டை மாநில நலனிலும் அக்கறை கொண்டு இருக்கலாம்).சொந்த மாநில மக்களும் காப்பற்ற பட நல்ல வாய்ப்பும் , கூடுதல் கால அவகாசம் கிடைத்திருக்கும்.

நீங்கள் எப்படி இருந்தாலும் தமிழன் என்றுமே தமிழன் தான். இல்லாதோருக்கு கொடுப்பது என்றும் தமிழனின் உயர்ந்த பண்பு. அதை எந்த நிலையிலும் தமிழன் இழக்கமாட்டான் .


நீரில் அரசியல் நீ செய்தாய் .
நீரில் உதவிகள் நாங்கள் செய்கின்றோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே
"நீரில் அரசியல் நீ செய்தாய் "
என்று எங்கள் நிலையில் நாங்கள் கேட்டோம்....


அவ்வை பாட்டி ஓதிய "ஆத்தி சூடி " மட்டும் தான் என்றும் சரியானது.

அறம் செய்ய விரும்பு !...








துரோகங்கள் என்றாவது ஒருநாள் தண்டிக்க படும் .....




என்றும் ..
விவசாயி






No comments:

Post a Comment