Friday, April 17, 2015

முதல் பேட்டி

  
முதல் பேட்டி
நேற்று மாலை சரியாக 6 மணி அளவில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது.என் கைப்பேசியில் பிச்சை முத்து என்ற பெயரும் ஒளிர என் முகத்தில் ஒரு சிறு புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தேன்.
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் அழைப்பு என்பதால் சற்று உற்சாகத்துடன் தான் இருவரும் உரையாடல்களை தொடர்ந்தோம். சுமார் 30 நிமிட உரையாடலுக்கு பின் அவனின் அலுவல் தொடர்பாக சிறு பேட்டி காணல் செய்ய உள்ளதாகவும் சொல்லி 5 நிமிட இடைவெளியில் மீண்டும் அழைத்து பேட்டி கண்டான்.
என் வாழ்வில் முதல் பேட்டி என்பது குறிப்பிட தக்கது.
பேட்டி முடிந்த பின் தொலைக்காட்சியை உயிர்பித்து ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட “சொல்ல மறந்த கதை” எனும் திரைப்படம் கண்டேன். அந்த படம் என் முன்னால் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் போது என் மனம் வேறு ஒரு நிகழ்வுடன் இணைத்து ஓடிக்கொண்டு இருந்தது.
எனக்கு தெரிந்த குடும்பத்தில் நடந்த நிகழ்வுடன் கிட்டத்தட்ட ஒத்த நிகழ்வு என்பதால் மனம் சற்று கணத்துடன் இருந்தது. திரைப்படத்தின் முடிவு சுபம் . ஆனால் அந்த குடும்பத்திற்கு என்று வரும் இந்த சுபம் என்று எண்ணிய படி தூக்கம் கண்களை தழுவ நான் தூக்கத்தை தழுவினேன்

No comments:

Post a Comment