Friday, July 19, 2013

தண்ணீர் கலெக்டர்...

தண்ணீர் தண்ணீர் கலெக்டர் !!

---------------------------------------

மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமாயின், அது நீருக்காக வரும் போராயிருக்கும். அத்தகையதோர் போர், உலகம் ஒட்டுமொத்தமாய் அழிந்திட வித்திடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

இதை எண்ணத்தில் கருக்கொண்டு, உருக்கொணரும் ஓர் முயற்சியே இந்தியாவில் முதல்முறையாக சோதனை முயற்சியாய் மேற்கொள்ளப்பட்டிருப்பதாய் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சாதனை.

சிலர் சென்ற இடமெல்லாம் சிறக்கும். நெல்லையில் கலெக்டராக இருந்தபோதே, இவரது புரட்சித்திட்டங்கள் பல இனிக்கும். தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும், நெல்லை மாநகரப்பகுதியிலேயே, வாரம் ஒருமுறைதான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நடைமுறை இருந்தது அப்போது, நெல்லை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரை கிணறுகள் அமைந்த மணப்படை வீடு ஆற்றுப் படுகையின் பக்கம் இவர் பார்வை பட்டது.

இரு நாட்கள் அவர் இருந்ததெல்லாம் அந்த ஆற்றுப்படுகையில்தான். ஆற்றுக்குள் இருந்த உரைகிணற்றின் மீதேறி, அங்கு பணியிலிருந்த தொழிலாளிகளிடம் உரையாடி உற்சாகப்படுத்தன் விளைவு, தியாகராஜநகர் பகுதிக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைத்தது.

அடுத்து அவர் சென்ற மாவட்டம்தான் திருவாரூர். சென்ற இடத்திலெல்லாம் சிறந்த முத்திரை பதிப்பது அவர் வாடிக்கை. அப்படி அவர் பதித்த முத்திரைதான் இந்த நீர்மூழ்கி தடுப்பணை. அந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் விழுந்து கிடந்ததை அறிந்த அவர் முதலில் குளங்களில் தேங்கியுள்ள மழைநீரை, ஆழ்துளை மூலம் பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர முயற்சிகள் மேற்கொண்டார்.

தற்போது, நீடாமங்கலம் அருகே, வெண்ணாற்றின் குறுக்கே,125 மீட்டர் நீளம்,10மீட்டர் அகலத்தில் பள்ளம் தோண்டி, அதில் 8 மீட்டர் ஆழத்தில்,38,000 மணல் மூடைகளை தண்ணீர் புகாத, மக்காத தார்பாயில் அடுக்கி தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு, ஆற்று நீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்து, பூமிக்குள் நீரைச்செலுத்தி தேக்கிவைக்க உதவிடும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

கோடிகள் செலவிட்டு, ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மாற்றாக, லட்சங்களில் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார்.

இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...

ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்...

"பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்டை அரிசி கிடைக்கும்... ஆனால் இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...

நான் எடுத்து இருக்கேன்... அதற்காக அரசிடம் இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்... அமெரிக்க சனாதிபதி என்னுடைய தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு போயிருக்காரு. ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக மாட்டேங்குது... காரணம் இதக் கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க, உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப் போகும்...வெளிநாட்டுக் காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...

நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான் பண்ண முடியும்... அதுல ஆராய்ச்சி பண்ண முடியும்... நீங்க தான கணினி, இணையம் அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க... நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட பரப்பலாமே...செத்து போன மனுசனுக்குத் தான் உசுரக் கொடுக்க முடியாது... ஆனா செத்துப் போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்... இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."

அவர் பெயர் நாக இரத்தின நாயுடு (http://www.srinaidu.com/profile.htm)... அவரின் தோட்டத்தினைப் பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார் http://www.srinaidu.com/
தேவைபட்டால் தயங்காமல் பேசுங்கள் தமிழிலேயே பேசுவார்.

PROFILE
Sri Gudiwada Nagarathanam Naidu
58 Years
Chittoor Dt (Andhra Pradesh)
8-66 Gowtham Nagar Colony, Dilsukhnagar. Hyderabad
09440424463
04024063963
Farm Address
Taramathipeta VI, Hyathnagar Mandal, Rangareddy dist.

The Kashmir Only to India